டங்ஸ்டன் சுரங்க பணிக்கு எந்த அனுமதியும் தரவில்லை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்​கொள்ள தமிழக அரசு எந்த அனும​தி​யும் அளிக்க​வில்லை என்று நீர்​வளத் துறை அமைச்சர் துரை​முருகன் தெரி​வித்​துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் தெரி​வித்​திருப்​ப​தாவது: மக்களின் வாழ்​வா​தாரத்தை பாதிக்​கும் எந்த சுரங்கப் பணிகளுக்​கும் தமிழக அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதி​யளித்து, இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​துக்கு அளிக்​கப்​பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்​யு​மாறு வலியுறுத்தி பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதி​யுள்​ளார். இதை ஏற்று பொது மக்கள் போராட்டத்தை விலக்​கிக் கொண்​டுள்ளனர்.

தவறான தகவல்: முதல்வர் ஸ்டா​லினின் உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டதை சகிக்க முடியாத சிலர், சுரங்க உரிமத்​துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்​ததாக விஷமத்​தனமான கருத்து​களைப் பரப்பி வருகின்​றனர். மேலும், இந்த உரிமத்தை வழங்​கு​வதற்கு முன்பாக மாநில அரசின் கருத்து​களைப் பெற்​றதாக மத்திய அரசும் தவறான தகவலைத் தெரி​வித்​துள்ளது.

2023 செப்​டம்பர் மாதம், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்​கை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட திருத்​தங்களை மத்திய அரசு தெரி​வித்​தது. உடனேயே, அந்த ஆண்டு அக். 3-ம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அதில் தமிழக அரசின் எதிர்ப்பை தெரி​வித்​தேன். ஆனால், நவ. 2-ம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்​தங்களை மேற்​கொண்ட பிறகே ஏலம் விடப்​படு​வ​தாக​வும், தேசிய அளவிலான தேவை​களைக் கருத்​தில் கொண்டு, மாநில அரசுகள் இந்தக் கொள்​கைக்கு ஒத்துழைக்க வேண்​டும் என்றும் குறிப்​பிட்டு, நமது எதிர்ப்புகளை நிராகரித்​தார்.

தொடர்ந்து, மேலூர் பகுதி​யில் உள்ள நிலங்​களைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்​கப்​பட்​ட​போதும், உத்தேசிக்​கப்​பட்​டுள்ள பகுதி​யில் உள்ள அரிட்​டாபட்டி பகுதி​யானது பல்லு​யிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்​டிக்​காட்​டினோம். இவை எவற்​றை​யுமே கருத்​தில் கொள்ளாத மத்திய அரசு, டங்ஸ்டன் உரிமத்தை தனியார் நிறு​வனத்​துக்கு அளித்​தது.

தற்போது மக்களின் எதிர்ப்​பை​யும், முதல்​வரின் உறுதியான நிலைப்​பாட்​டை​யும் கண்டு மிரண்டு மத்திய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடும் கட்சிகளும், மக்களின் கவனத்தை ​திசை ​திருப்ப, சுரங்க ஏலத்​துக்கு தமிழக அரசு ஒப்பு​தல் தெரி​வித்​ததாக பொய் செய்தி​களைப் பரப்பி வரு​கின்றன. இவற்றை மக்​கள் நம்பத் த​யாராக இல்லை. இவ்​வாறு அமைச்​சர்​ தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்