திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 2 செ.மீ., பெய்துள்ளது. ஆவடி மாநகராட்சி பகுதிகள், திருநின்றவூர் நகராட்சி பகுதிகள், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம், பாடியநல்லூர் ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் செங்குன்றம் ஜி.என்.டி. சாலை, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி.சாலையில் தாமரை ஏரி நிரம்பி, மழைநீரோடு, கழிவு நீர் கலந்து ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆவடி அருகே உள்ள கோயில்பதாகை ஏரியும் நிரம்பி, குடியிருப்பு பகுதிகள், சாலைகள் வழியாக உபரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பொதுமக்கள் சாலை மறியல்: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாயுமான் தெருவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலத்த காற்றுடன் பெய்துவரும் இம்மழையால், பழவேற்காடு ஏரிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் ஏரியினுள் இழுத்து செல்லப்பட்டது. அவ்வாறு ஏரியினுள் இழுத்து செல்லப்பட்ட படகுகளை கரைக்கு கொண்டுவரும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். பழவேற்காடு, காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
செங்குன்றம், ஆரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மின் தடை நிலவுகிறது. தொடர் மழை காரணமாக திருவள்ளூர், ஆவடி, திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட மாவட்டத்தின் நகர்ப்பகுதிகளில் உள்ள பஜார் வீதிகள், மார்க்கெட்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. மொத்தத்தில், இந்த தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago