சென்னை மக்களுக்கு உதவிட திமுக, அதிமுக, பாஜக ‘அவசர உதவி எண்கள்’ அறிவிப்பு | ஃபெஞ்சல் புயல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அரசியல் கட்சிகள் சார்பில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேவைப்படுவோருக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘ஃபெஞ்சல்’ புயலையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் பொதுமக்களுக்கு தங்களது கட்சியினர் மூலம் உதவிகளை செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளன.

திமுக: திமுக சார்பில் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகமான அறிவாலயத்தில் வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் 80694 46900 என்ற செல்போன் எண்ணை பயன்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, “ஃபெஞ்சல்” புயலால் பெய்துவரும் கனமழையையொட்டி மக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சென்னை வாழ் மக்கள் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால தொடர்பு ஒருங்கிணைப்பு குழுவை #RapidResponseTeam என்ற ஹேஷ்டேக் உடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், சென்னை புறநகர் (96772 38464), வட சென்னை வடகிழக்கு (99520 81710), வடசென்னை தென்கிழக்கு (97907 80187), தென் சென்னை (86677 06660), தென் சென்னை வடக்கு (86673 27700) போன்ற பகுதிகளுக்கு தனித்தனியாக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும் அம்மா உணவகங்களை 24 மணி நேரமும் செயல்படுத்தி, பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று உணவு வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பாஜக: தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, “ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்க, பாஜக தலைமையகமான கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் 91500 21835, 91500 21832 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்