மேட்டூர் அணையில் பச்சையாக மாறிய நீர், கடும் துர்நாற்றம் - கட்டுப்படுத்த நடவடிக்கை

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணையில் பச்சையாக மாறிய தண்ணீரால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் திரவ கலவை இன்று தெளிக்கப்பட்டது.

மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, கர்நாடக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஜுலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, அணையில் இருந்து டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், அணைக்கு நீர்வரத்தும் சற்று அதிகரித்து காணப்படுவதால் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காவிரி கரையில் விவசாயம் செய்வதற்காக பயன்படுத்திய ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்து, அழுகிய பயிர்கள் செடி, கொடிகள் பல வகையான தாவரங்கள் ரசாயன மாற்றம் அடைந்து பச்சை நிற படலங்களாக நீர் தேக்கம் முழுவதும் மாறி வருகிறது. வெயில் தாக்கம் ஏற்படும் போது நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், தங்கமாபுரிபட்டினம் மற்றும் கவிபுரம், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் அணை நீர்த்தேக்க பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் தேங்கும் கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக இன்று நீர்வளத்துறையினர் படகு மற்றும் பரிசல் மூலமாக திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி திரவ கலவையை தெளித்து துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி வருகிறனர். பச்சை நிற படலம் உள்ள பகுதியில் 3 நாட்கள் தெளிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 3,976 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 4,528 கன அடியாக சற்று சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 110.37 அடியாகவும், நீர்இருப்பு 78.93 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்