அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது, இருப்பினும் தமிழகத்தில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன. அமெரிக்காவில் சோலார் பவர் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதை அடியோடு மறுத்துள்ளது அதானி குழுமம். இதில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும், அதானியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளில் அதிர்ச்சி தரும் விதமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின்வாரியங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், “கடந்த 3 ஆண்டுகளாக நேரடியாக அதானி நிறுவனத்துடன் எந்த வணிகத் தொடர்பும் இல்லை” என்கிறார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனிடையே, “முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்தாரா என்று விளக்கமளிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அளித்த பதில் பாமகவினரை டென்ஷனாக்கியுள்ளது.
அதானி விவகாரத்தை தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அலறவிடும் நிலையில், தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே இந்த விவகாரத்தில் அடக்கி வாசிக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்ததாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இதுபற்றி வாய்திறக்கவே இல்லை.
» ‘எச்.ஐ.வி தொற்றுள்ளோரை மனித நேயத்துடன் ஆதரிப்போம்’- முதல்வர் மு.க.ஸ்டாலின்
» ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் காற்றுடன் பலத்த மழை; மீட்புப் பணியில் 5,000 பேர் தீவிரம்
தங்களது ஆட்சி காலத்தில் அதானி குழுமத்துடன் இருந்த உறவே அவர்களை மவுனமாக்கிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. திமுக, பாஜக என இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் அதிமுக, அதானி விவகாரத்தில் ‘அமைதி காப்பது’ ஏன் என அதிமுகவுக்குள்ளேயே சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேபோல அதானி விவகாரத்தை தமிழ்நாட்டில் பெரிதாக எழுப்ப முடியாமல், திமுக கூட்டணிக் கட்சிகளும் பூசிமெழுகி அறிக்கை வெளியிட்டு வருகின்றன. முன்பெல்லாம் அதானி விவகாரம் என்றால் அதிரடி கேள்விகளை எழுப்பும் தமிழகத்தில் உள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகள், இப்போது திமுகவுக்கு சங்கடம் வருமோ என்று மவுனமாகி விட்டனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.
“அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்” என நைஸாக நழுவிவிட்டார் திருமாவளவன். “அதானி சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டும் ராமதாஸ், பிரதமர் மோடியை கேள்வி கேட்பாரா?” என ஒரே போடாக போட்டிருக்கிறார் வைகோ.
தர்மசங்கடமாக, அதானி விவகாரத்தில் தமிழகத்தின் பெயர் இடம்பெற்றதை பயன்படுத்தி அரசியல் செய்ய முடியாத சூழலில் பாஜகவும் பரிதவிக்கிறது. மாநிலத்தில் அதானி விவகாரத்தை கையில் எடுத்தால், அது நமக்கே பூமராங் ஆகிவிடும் என பாஜக அமைதியாகிவிட்டது.
இதில் திமுகவை குற்றம்சாட்டி அறிக்கை விட்டதோடு பாமகவும் ஆஃப் மோடுக்கு சென்றுவிட்டது. திமுகவை கடுமையாக எதிர்க்கும் தினகரன், ஓபிஎஸ், வாசன் போன்றோரும் இவ்விவகாரத்தில் கனத்த மவுனம்தான். எந்த சர்ச்சை வெடித்தாலும், அதில் ஆளும் கட்சி தரப்போ அல்லது எதிர்க்கட்சிகளின் தரப்போ கையில் எடுத்து தெறிக்கவிடுவது வழக்கம். ஆனால் தனது விஷயத்தில் அனைத்துத் தரப்பையும் அமைதியாக்கியிருக்கிறது அதானியின் ‘மந்திரம்’!
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago