இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நெருக்கம் அதிகம் என்பார்கள். அப்படி இருக்கையில், மாரி செல்வராஜின் சொந்த கிராமமான புளியங்குளத்தைச் சேர்ந்த 300 பேர் விஜய்யின் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சினிமா இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த கிராமமான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த சுமார் 300 பேர் கடந்த 28-ம் தேதி மொத்தமாக தவெகவில் இணைந்தனர். இதில், திமுக, அதிமுக, விசிக, நாதக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘வாழை’ படத்தில் சிவணைந்தன் கதாப்பாத்திரத்தில் நடித்த பொன்வேல் என்ற சிறுவனின் பெற்றோரும் இந்த இணைப்பில் இருந்தனர். பொன்வேலும் இதில் கலந்து கொண்டார். அவருக்கும் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கட்சி சால்வை அணிவித்தார். இந்த மெகா இணைப்பு குறித்து நம்மிடம் பேசிய அஜிதா ஆக்னஸ், “விஜய் மீதான ஈர்ப்பில் தான் புளியங்குளத்து மக்கள் மொத்தமாக தவெக-வில் இணைந்துள்ளனர். கிராமமாகவே மொத்தமாக இணைய விரும்புவதாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
நீங்கள் என்னைத் தேடி வரவேண்டாம். நானே உங்களைத் தேடி வருகிறேன் எனக் கூறி இருந்தேன். அதன்படி இன்று இங்கு வந்தோம். மாற்றத்தை உருவாக்க ஒருவர் வந்துள்ளார். அந்த மாற்றத்தில் நாமும் உடனிருப்போம் என்ற அடிப்படையில் தான் இவர்கள் அனைவரும் தவெக-வுக்கு வந்துள்ளனர்.
தங்கள் கிராமத்துக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. விஜய் ஆட்சிக்கு வந்தால் அது நிறைவேறும், குறிப்பாக, தங்கள் தொழிலான விவசாயம் மேம்படும் என இவர்கள் நம்புகிறார்கள். ‘வாழை’ படத்தில் நடித்த பொன்வேலின் குடும்பத்தினர் மொத்தமாகவே தவெக-வில் இணைந்துள்ளனர். பொன்வேல் 2026-ல் தனது முதல் ஓட்டை விஜய்க்குத்தான் போடுவார் என அவரது பெற்றோர் தெரிவித்தனர். இது எங்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தாங்கள் தவெகவில் இணைந்து பணியாற்ற இயக்குநர் மாரி செல்வராஜூம் ஆதரவு தெரிவித்ததாக புளியங்குளத்து மக்கள் கூறினர். 2026-ல் விஜய் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இனி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.
இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த புளியங்குளத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான த.பொன்மயில் நம்மிடம் பேசுகையில், “தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது விஜய் மூலமாக வரும் என எதிர்பார்க்கின்றனர். மேலும், விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய்யின் பேச்சு கிராம மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாக்கத்தை ஒருங்கிணைத்து மக்களை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளோம். இதில் இளைஞர்கள் தான் அதிகமாக இணைந்துள்ளனர். 2026-ல் நிச்சயம் மாற்றம் நிகழும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago