அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ. 1,100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதன்மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகுவதாக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் நிர்ணயி்த்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளியதன் மூலம் கிடைத்த தொகையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பி்ல் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என்பதால் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர் நேற்று ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தக்கர் ஆஜரானார். அவரது சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தார்.
அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு வழக்கறிஞர்கள் எந்தெந்த வழக்குகளில் ஆஜராகுவது என்பதை தேர்வு செய்து அந்த வழக்குகளில் மட்டும் ஆஜராக அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அரசு வழக்கறிஞர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.1,100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியது. இது அனைத்தும் மக்களின் வரிப்பணம் தான். அதேபோல மக்களின் வரிப்பணம் தான் அரசு வழக்கறிஞர்களுக்கும் ஊதியமாக வழங்கப்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அரசு தரப்பில் வழக்கு தொடர்ந்து விட்டு அதற்கு அரசு வழக்கறிஞர்களே ஆஜராகவில்லை என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?. தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதுபோல இதுபோன்ற முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான காரணத்தை அரசுதான் கேட்டறிய வேண்டும். அடுத்த விசாரணைக்கு பொதுத்துறைச் செயலர் ஆஜராகத் தேவையில்லை. இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago