மதுரை: நடிகை கவுதமி தொடரந்த நில மோசடி வழக்கில் கணவன், மனைவிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தும், 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலம் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அழகப்பன் உட்பட பலர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை கவுதமி புகார் அளித்தார். அந்தப் புகாரில் ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி அழகப்பன் என்பவர் என்னிடம் ரூ.3 கோடி வாங்கினார். முதுகுளத்தூர் சுவாத்தான் கிராமத்தில் ரூ.57 லட்சத்திற்கு 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்தார். இந்த நிலம் பிரசிங்பார்ம் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது.
இந்த நிலத்தை விற்க செபி அமைப்பு தடை விதித்துள்ளது. அதை மறைத்து நிலத்தை மோசடியாக என்னிடம் விற்றுள்ளார். எனவே அழகப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கவுதமி கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் அழகப்பன் உட்பட 6 பேர் மீது குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அழகப்பன், அவரது மனைவி ஆர்த்தி, ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
அழகப்பன் உள்பட 6 பேருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து நடிகை கவுதமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. நடிகை கவுதமி நீதிமன்றத்தில் ஆஜரானார். மனுதாரர்கள் தரப்பில், "வழக்கில் தொடர்பில்லாத குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் உறவினர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
» நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு காலமானார்
» புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - உஷார் நிலை தீவிரம்
இதையடுத்து, ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியும், கவுதமியிடம் பெற்ற பணத்தை திரும்ப செலுத்துவதாக இருந்தால் அழகப்பன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்குவதாகவும் நீிதிபதி தெரிவித்தார். அதற்கு அழகப்பன், ஆர்த்தி ஆகியோர் தரப்பில் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். அதற்கு அனுமதி வழங்கி இருவரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago