அரசியல் தலைநகரான சென்னையை விட தொழில் நகரமான கோவைதான் இப்போது அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் ஒரே குறியாக இருக்கிறது. காரணம், தொடர்ச்சியாக கோவை, அதிமுகவின் கோட்டையாக இருப்பது தான். கடந்த 3 சட்டப் பேரவைத் தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை தொடர்ச்சியாக தக்கவைத்து வருகிறது அதிமுக. இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதில் திமுக இம்முறை அதிக முனைப்பு காட்டுகிறது.
அதற்காக கோவைக்கு சிறப்பு கவனமெடுத்து திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தான் நினைத்ததை சாதிப்பதற்காக கூடுதல் பலமாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தேர்தல் களப் பணியை ஒப்படைத்திருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் ‘தந்திர’ வித்தைகளை திறம்படக் கற்ற செந்தில் பாலாஜியின் வியூகங்கள் இம்முறை கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு கணிசமான எம்எல்ஏ-க்களைப் பெற்றுக் கொடுக்கும் என்பது திமுக தலைமையின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கேற்ப பாலாஜியும் இப்போதே மிக நுணுக்கமாக தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார்.
கோவை மாவட்டத்தை அதிமுக கோட்டையாக மாற்றிக் காட்டியதன் மூலம் அதிமுகவின அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தேர்தல் ‘மாயாஜாலங்களில்’ செந்தில் பாலாஜிக்கு கொஞ்சமும் சளைக்காதவர். ஆனால், பாஜகவையும் ஒதுக்கிவிட்டு வலுவான கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியாததால் இம்முறை கோவையில் அதிமுகவை சாதனை சிகரத்தில் ஏற்றுவது வேலுமணிக்கு சற்று சவாலாகவே இருக்கும்.
போதாக்குறைக்கு, நடிகர் விஜய் வேறு திமுகவை எதிர்க்கும் அதிமுக வாக்கு வங்கிக்கு பங்கு கேட்டு வருவதால் வேலுமணிக்கு கூடுதல் சிக்கல் தான். இதைப் புரிந்துகொண்டதால் தான், பாஜக கூட்டணி இருந்தாலாவது பரவாயில்லை என நினைக்கிறது வேலுமணி தரப்பு.
» இம்சையில் சிக்கிய இசைவாணி..!
» பல்லடம் அருகே தாய், தந்தை, மகன் கொலை - போலீசார் தீவிர விசாரணை
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரான பொள்ளாச்சி வி.ஜெயராமன், “2026-ல் கோவையில் மட்டுமல்ல... 2011 தேர்தலில் தமிழகம் முழுவதும் பெற்ற பிரம்மாண்ட வெற்றியைப் பெறுவோம். அந்தளவுக்கு திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதிப்பில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் டெல்லிக்கானது என்பதால் கோவை மக்கள் மாற்றி வாக்களித்தார்கள். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அது நடக்காது.
எடப்பாடி பழனிசாமியின் நான்கரை ஆண்டு கால நல்லாட்சியில் தாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததை மக்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதிமுகவை ஆதரிக்க தயாராய் இருக்கிறார்கள்” என்றார். திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜகவும் கோவை மாவட்டத்தை பெரிதும் நம்புகிறது. இயல்பாகவே பாஜகவுக்கு வாக்களிக்கும் மக்கள் இங்கு கணிசமாக இருப்பதால் அண்ணாமலை இந்த மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணி இல்லாமலேயே கோவை தொகுதியில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜக கணிசமான ஓட்டுகளை பெற்றது. இதையெல்லாம் கணக்கெடுத்து வைத்திருக்கும் அண்ணாமலை, 2026 தேர்தலில் கூட்டணி எப்படி அமைந்தாலும் கோவையில் பாஜக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட அதிரடி அரசியல் வியூகங்களுடன் காத்திருப்பதாக பாஜகவினர் சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். முப்பெரும் தலைகளில் யார் முந்துகிறார்கள் என்று பார்க்கலாம்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago