ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்த வழக்கு: அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

சென்னை: சட்​ட​விரோத மணல் குவாரிகள் தொடர்பாக 10 மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு அமலாக்​கத்​துறை சம்மன் அனுப்​பியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில் அரசு தரப்பு வழக்​கறிஞர்கள் ஆஜரா​காத​தால் அதிருப்தி தெரி​வித்த நீதிப​தி​கள், பொதுத்​துறைச் செயலர் இன்று நேரில் ஆஜராக உத்தர​விட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் உள்ள மணல் குவாரி​களில் அரசு நிர்​ண​யித்த அளவை விட சட்ட​விரோதமாக கூடு​தலாக மணல் அள்ளப்​பட்டு, கோடிக்​கணக்​கில் விற்பனை செய்​ததன் மூலம் சட்ட​விரோத பணப்​பரி​மாற்றம் நடந்​துள்ள​தாகக்​கூறி அமலாக்​கத்​துறை அதிகாரிகள் பல்வேறு இடங்​களில் சோதனை நடத்​தினர். அதன் தொடர்ச்​சியாக திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சி​யர்​களுக்​கும், பொதுப்​பணித்​துறை மற்றும் நீர்​வளத்​துறை அதிகா்ரி​களுக்​கும் அமலாக்​கத்​துறை அதிகாரிகள் சம்மன் அனுப்​பி​யிருந்​தனர்.

இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்​துறை செயலர், நீர்​வளத்​துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சி​யர்கள் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு நீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், எம்.ஜோ​திராமன் ஆகியோர் அடங்கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்​கத்​துறை சார்​பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல். சுந்​தரேசன் மற்றும் அமலாக்​கத்​துறை சிறப்பு வழக்​கறிஞர் என். ரமேஷ் ஆகியோர், இந்த வழக்​கில் அமலாக்​கத்​துறை​யின் விசா​ரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்​கு​வதாக மாவட்ட ஆட்சி​யர்கள் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் உறுதி​யளிக்​கப்​பட்டது என சுட்​டிக்​காட்​டினர். அப்போது இந்த வழக்​கில் தமிழக அரசு தரப்​பில் வழக்​கறிஞர்கள் யாரும் ஆஜரா​காததற்கு கடும் அதிருப்தி தெரி​வித்த நீதிப​தி​கள், இந்த வழக்​கின் மனுதாரர் என்ற ​முறை​யில் தமிழக அரசின் பொதுத்​துறைச் செயலர் இன்று (நவ.29) நேரில் ஆஜராகி ​விளக்​கமளிக்க உத்​தர​விட்​டுள்​ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்