தமிழக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.4,574  கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் அமைச்சர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சுற்றுலாத்​துறை அமைச்சர் ஆர்.ராஜேந்​திரன் நேற்று டெல்​லி​யில் மத்திய சுற்றுலா, கலாச்சா​ரத்​துறை அமைச்சர் கஜேந்​திரசிங் செகாவத்தை சந்தித்​துப் பேசினார்.

தமிழக அரசின் சிறப்பு பிரதி​நிதி ஏகேஎஸ் விஜயன், திமுக எம்.பி. திருச்சி சிவா மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்​துறை செயலர் பி.சந்​திரமோகன், சுற்றுலாத்​துறை இயக்​குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்​தனர். அப்போது அமைச்சர் ராஜேந்​திரன், தமிழகத்​தின் பல்வேறு சுற்றுலா மேம்​பாட்டுப் பணிகளுக்கு ரூ.4573.53 கோடி வழங்க வேண்​டும் என்று மத்திய அமைச்​சரிடம் வலியுறுத்​தினார். இதுதொடர்பாக மத்திய அமைச்​சரிடம் அவர் அளித்த மனுவின் விவரம்: ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்​டத்​தின்​கீழ், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்​லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலா பயணி​களுக்கான வசதிகளை மேம்​படுத்​தும் திட்​டத்​துக்கு ரூ.30 கோடி​யும், நீலகிரி பைக்​காரா இயற்கை சுற்றுலா தல மேம்​பாட்டு திட்​டத்​துக்கு ரூ.28.3 கோடி​யும் ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.

சிறப்பு நிதி​யுதவி திட்​டத்​தின்​கீழ் மாமல்​லபுரத்​தில் பாரம்​பரிய நந்தவனம் அமைக்​கும் திட்​டத்​துக்கு ரூ.99 கோடி​யும், உதகை தேவலா​வில் சுற்றுலா பூந்​தோட்டம் அமைக்​கும் திட்​டத்​துக்கு ரூ.72.58 கோடி​யும், ராமேசு​வரத்​தில் சுற்றுலா பயணிகள் மேம்​பாட்டு திட்​டத்​துக்கு ரூ.99 கோடி​யும் தேவை. மேலும், பிரசாத் திட்​டத்​தின்​கீழ் 8 நவகிரக கோயில்​களில் சுற்றுலா பயணி​களுக்கான வசதிகளை மேம்​படுத்த ரூ.44.95 கோடி​யும், மராட்​டியர்​கள், நாயக்​கர்​கள், பாளை​யக்​காரர்கள் எழுப்பிய பாரம்​பரிய கட்டிடங்களை பாது​காக்​க​வும், புனரமைக்​க​வும், சீரமைக்​க​வும் ரூ.3000 கோடி​யும், சுற்றுலாத்​துறை வளர்ச்​சியை மேம்​படுத்த ரூ.1,200 கோடி​யும் (மொத்​தம் ரூ.4,573.53 கோடி) வழங்க வேண்​டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்