சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 11-ம் ஆண்டையொட்டி அதன் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து இயக்கத்துக்காக, மக்களுக்காக உழைத்து வருவது கட்சிக்கு பலம் சேர்க்கிறது.
கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு கட்சியினர் ஒவ்வொருவரின் கடின உழைப்பே காரணமாகும். இந்நிலையில் த.மா.கா வினர் தொடர்ந்து கட்சி வளர வேண்டும் என்பதற்காக உறுப்பினர் சேர்ப்பு பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நாளில் வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்க உறுதியேற்போம். தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) நேர்மை, எளிமை, தூய்மையைப் பின்பற்றி தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து செயல்பட்டு வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago