நாகை, கடலூர் துறைமுகங்களில் இருந்து மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது 150 பயணிகளுடன் வாரத்துக்கு 5 நாட்களுக்கு இருவழிகளிலும் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மாலத்தீவுகள், இலங்கை யாழ்ப்பாணம், கொழும்பு, காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு கடலூர், நாகை துறைமுகங்களில் இருந்து சரக்குகளைக் கையாள தமிழ்நாடு கடல்சார் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு வேளாண் பொருட்கள், மீன்சார் பொருட்கள் மற்றும் இதர நுகர்வுப் பொருட்கள் என ஆண்டுக்கு 75,000 டன் சரக்குகளைக் கையாளவும், வரும் ஆண்டுகளில் இது பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பது தெரியவருகிறது.
சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள், மிதவைகளைக் கையாள்வதற்குத் தேவையான கட்டமைப்புகள் மற்றும் சுங்கம், குடிவரவு, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து அனுமதிகளுடன் கடலூர் மற்றும் நாகை துறைமுகங்கள் தயாராக உள்ளன. இந்த வசதிகளை சரக்கு இறக்குமதி-ஏற்றுமதியாளர்கள், முகவர்கள் மற்றும் மரக்கல மிதவை உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொண்டு, சரக்கு இறக்குமதி- ஏற்றுமதி செய்து, குறைந்த செலவில் திருப்திகரமான சேவைகளை பெற்றுப் பயன்பெறலாம். இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் பெருகக்கூடும்.
இந்த துறைமுகங்களின் வாயிலாக சரக்கு இறக்குமதி- ஏற்றுமதி செய்வது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலர்களை கடலூர்- 94422 43225, நாகை- 94425 59978 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என நாகை ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago