குன்னூர்: இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. தளவாட உற்பத்தி 30 மடங்காக அதிகரித்துள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். மேலும், இந்திய வரலாற்றில் பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி சாதனை புரிந்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகளுடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவ.28) கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: “நீலகிரி மாவட்டத்தில் எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ள இந்தப் பயிற்சி கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டிலேயே முதன்மையான இந்தப் பயிற்சி கல்லூரியில் 26 நாடுகளை சேர்ந்த 38 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அந்த அதிகாரிகளின் அனுபவத்தை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவது இன்றியமையாதது. இனிவரும் காலங்களில் அதிகளவில் பெண்கள் இதுபோன்ற பாதுகாப்பு படை பயிற்சிகளில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்கிறேன். பெண்கள் நாட்டுக்காக சேவை புரிவது பாராட்டுக்குரியது. பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பாதுகாப்பு துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரிகளை சந்தித்துள்ளேன். முப்படைகளில் உள்ள முக்கிய பொறுப்புகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்திய கடற்படையில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி ஒருவர் காமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் பணிபுரியும் பெண் அக்னி வீரர்கள் மற்றும் மாலுமிகளை சந்தித்தேன். பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு ஊக்கமாக உள்ளது. மேலும் பல பெண்கள் முப்படைகளிலும் இணைவார்கள் என எதிர்பார்க்கிறேன். இந்திய வரலாற்றில் பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி, சாதனை புரிந்து வருகின்றனர்.
» நளினம் கூடி போனதே.... ‘சொர்க்கவாசல்’ சானியா ஐயப்பன் க்ளிக்ஸ்!
» நவ.30-ல் கரையைக் கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை!
வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, இந்திய மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத் துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. 70 ஆண்டுகளாக இந்த முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி நவீன தொழில்நுட்பத்துடன், டிஜிட்டல் மயத்துடன் சிறப்பாக உள் கட்டமைப்புடன் பயிற்சி அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சர்வதேச அளவில் இந்த பயிற்சி மையம் அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பல அதிகாரிகள், தங்கள் நாடுகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்திய பாதுகாப்புத் துறையினர் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பு முன்னோடியாக உள்ளனர். இந்திய முப்படைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் குடும்பத்தாரின் பங்கு அளப்பரியது.
இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றனர். இந்திய எதிர்கால சாவல்களை சமாளிக்கும் வகையில் தனித்துவத்துடன், சுய சார்புடன் முன்னேறி வருகிறது. நமது பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, தளவாடங்களை ஏற்றுமதி செய்ய நம்பகத்தன்மையுடன் செயலாற்றி வருகிறது.
பாதுகாப்புத் துறையில் நமது பாதுகாப்பு நிறுவனங்களாக ஹெச்ஏஎல், டிஆர்டிஓ தடம் பதித்து வருகின்றன. தற்போது ராணுவ தளவாடங்கள் 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டமே காரணம். வேகமாக மாறி வரும் புவியமைப்பு மாற்றத்தால் நமது புதிய சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றுமின்றி, சைபர் குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்தை சமாளிக்க வேண்டி நிலையுள்ளது. அத்துடன் காலநிலை மாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். அதற்கான ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் நவீன தொழில்நுட்பகளை உருவாக்க வேண்டும். நமது முப்படைகள் எதிர்கால சவால்களை சமாளிக்கும் வல்லமை படைத்துள்ளனர் என நம்பிக்கையுள்ளது.
இந்தப் பயிற்சி மூலம் உங்களுக்கு அனைத்து சவால்களை சமாளிக்கும் திறனை வழங்கும். இந்தியா உலகமே ஒரு குடும்பமாக பாவித்து வருவதால், சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறது. பயிற்சி பெற்று வரும் அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வர் வீரேந்திர வாட்ஸ் பங்கேற்றனர். முன்னதாக, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெலிங்டனில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை உதகையிலிருந்து வெலிங்டனுக்கு கார் மூலம் சென்றார். இதனால், உதகை குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago