மதம் மாறியவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு - இந்து முன்னணி வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியைச் சார்ந்த செல்வராணி என்பவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர். இவர் தன்னை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் (பட்டியல் சமுதாயம்) சார்ந்தவர் எனக் கூறி சாதி சான்றிதழ் கோரியுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி மாநில அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதம் மாறியவர்களுக்கு இது போல் சாதி சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி அவரது வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து செல்வராணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி பங்கஜ் மிட்டல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்புமிக்க ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அதன் கொள்கை மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டு அதனடிபடையில் மதம் மாறியதாக இருக்க வேண்டும். ஆனால் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் அரசு வேலை வாய்ப்பிற்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்படுவதை ஏற்க முடியாது. இது அரசியலமைப்புச்சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை இந்து முன்னணி பேரியக்கம் அனைத்து இந்து மக்களின் சார்பாக மனதார வரவேற்கிறது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள், மதம் மாறியபிறகும் தங்களை இந்து எனக் கூறிக்கொண்டு மோசடியாக சலுகைகளை அனுபவித்து வருவதை தடுக்க வேண்டும் என இந்துமுன்னணி நெடுங்காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழகத்தில் சிலர் மதம் மாறிய பிறகும் தன்னை இந்து பட்டியல் சமுதாயத்தவர் என ஏமாற்றி சான்றிதழ் பெற்று உண்மையான இந்து பட்டியல் சமுதாய மக்களின் சலுகைகளை மோசடியாக அபகரித்து வருகின்றனர். இத்தகைய மோசடிக்கு தற்போது உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் மதம் மாறியவர்களுக்கு இந்து பட்டியலினத்தவர் என போலிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதன் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தானாக முன்வந்து தமிழகத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சாதி சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள போலி நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் உண்மையான பட்டியல் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் இந்துமுன்னணி வலியுறுத்துகிறது. இந்து பட்டியலின மக்களின் உரிமைகளை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்துமுன்னணி மனதார வரவேற்கிறது.” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்