சென்னை: “உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிச.9-ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ளது. சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்கு தமிழக மக்களும், நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (நவ.28) தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிச.9-ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ளது. சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்கு தமிழக மக்களும், நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் மக்கள் பணிக்கு மீண்டும் திரும்புவார். மருத்துவர்களும் அவரை நல்ல முறையில் கவனித்து வருகிறார்கள்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கெனவே பேஸ் மேக்கர் வைத்துள்ளனர். மூச்சு விடுவதில் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
» குமரனை கொண்டாடிய குழந்தைகள்!
» மழையால் 33% நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
உடல்நிலை நன்றாக இருந்துவந்த நிலையில், புதன்கிழமை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல முறையில் மீண்டும் திரும்பி வருவார்.” என்று அவர் கூறினார்.
முதல்வர் நலம் விசாரிப்பு: முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago