மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்க படகுகளுக்கான டீசல் மானியம் நிறுத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதன் எதிரொலியாக, மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் திருவான்மியூர் குப்பம் வரை 2,300 செயற்கை இழை படகுகளும், 772 விசைப் படகுகளும் உள்ளன. இந்தப் படகுகளுக்கு எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, பைபர் படகுகள் மற்றும் செயற்கை இழை படகுகளுக்கு தலா 4 ஆயிரம் லிட்டர் டீசலும், விசைப் படகுகளுக்கு தலா 20 ஆயிரம் லிட்டர் டீசலும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

தற்போது, வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு படகுகளுக்கு வழங்கும் மானிய டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்