சென்னை: மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் பொதுமக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் சைபர் கிரிமினல்களின் மிரட்டல்கள், அதனால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து தப்பிப்பது, விழிப்புடன் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றத்தின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான டி.என்.வள்ளிநாயகம் வரவேற்றார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வருமான வரித்துறை ஆணையர் வி.நந்தகுமார் பேசியதாவது: கிரெடிட், டெபிட் கார்டு, மெயில் ஐடி, நெட்பேங்கிங் போன்றவற்றில் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ‘பாஸ்வேர்டு’ வைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அதனை எளிதாக தெரிந்து கொண்டு சைபர் குற்றவாளிகள் அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி உங்கள் தகவல்கள், தரவுகளை எடுத்து பணத்தை திருடும் அபாயம் உள்ளது. எனவே, அதனை அடிக்கடி மாற்ற வேண்டும்.
முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்யக்கூடாது. பணம் செலுத்தாமல் பதிவிறக்கம் செய்யும் செயலிகளால் ஆபத்து அதிகம். முடிந்தவரை சாதாரண செல்போன்களைப் பயன்படுத்துவது நல்லது. முகநூல், வாட்ஸ்அப்பின் ‘டிபி’யில் உங்களது புகைப்படங்களை வைக்க வேண்டாம். பெட்ரோல் பங்க், உணவகங்களில் உங்கள் கண் முன்னே டெபிட், கிரெடிட் கார்டுகளை ‘ஸ்வைப்’ பண்ணச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். மத்திய அரசு மின்னணு பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் செயல் இயக்குநர் என்.சுப்பிரமணியம் பேசும்போது, “குறுஞ்செய்தி, வாட்ஸ்அப்பில் வரும் செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது” என்றார்.
தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கவுன்சில் (என்சிஎஸ்ஆர்சி) இயக்குநர் இ.காளிராஜ் பேசுகையில், “பொது இடங்களில் உள்ள வைஃபை-யைப் பயன்படுத்தி முக்கிய பரிவர்த்தனையை செய்யக் கூடாது. உங்களது ‘கேஒய்சி’யை புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லி ‘லிங்க்’ வரும். வங்கியில் அதுகுறித்து சரிபார்க்காமல் ‘லிங்க்’கை கிளிக் செய்தால் சைபர் க்ரைம் மோசடிக்கு ஆளாக நேரிடும்” என்றார். இந்த நிகழ்வில், மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago