ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் பார்க்க கட்டாயப்படுத்தக் கூடாது: அரசு மருத்துவர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

அவசர மகப்பேறு வசதியில்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், வட்டார மருத்துவ அலுவலர்களை வட்டார சுகாதார அலுவலர்களாக நியமன பதவியாக மாற்ற வேண்டும். மகப்பேறு மரண விகிதத்தை 10 ஆக குறைத்திட, அவசர மகப்பேறு வசதியில்லா ஆரம்ப சுகாதார நிலைய அளவில் பிரசவங்களை கட்டாயப்படுத்தக்கூடாது. கிராம சுகாதார செவிலியர்கள் முதன்மை பணியான தாய் - சேய் நலத்தில் முழு கவனமும் செலுத்தும் வகையில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை திட்டத்தை பழையபடி சமூக நலத்துறையின் கீழ் மாற்றினால், மகப்பேறு மரண விகிதம் 10 ஆக குறைக்க உதவும்.

ஒரு சில ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட ரூ.3,000 ஊக்கத்தொகை பாரபட்சமின்றி அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களிடம் சுய மதிப்பீட்டு படிவம் மற்றும் நோயாளிகளின் கருத்து படிவம் கேட்கக்கூடாது. பாதுகாப்பு காரணங்களுக்காக கோரப்பட்ட கண்காணிப்பு கேமராவை கொண்டு மருத்துவ அலுவலர்களை கண்காணிக்க கூடாது.

கூடுதலாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 385 வட்டாரங்களுக்கு, புதிதாக 385 மருத்துவ அலுவலர்கள் பதவியை உருவாக்க வேண்டும். தேசிய நலக் குழுமம் மூலமாக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அனைத்து வகை நிதிகளையும் தங்குதடையின்றி வழங்கிட வேண்டும். அனைத்து ஆய்வுக்கூட்டங்களையும் பணிநேரத்தில் நடத்த வேண்டும். தற்போது நிலவும் மருத்துவ அலுவலர் பற்றாக்குறை காரணமாக மருத்துவ அலுவலர்களுக்கான எம்ஆர்பி தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்