விரைவில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தையும் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகள் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார்.
இதை வைத்தும் இப்போது அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. 2019-ல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த திமுக தலைவர் ஸ்டாலின், திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவுத்தூண்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், ஸ்டாலின் அங்கு வரக்கூடாது என பாமகவினர் மல்லுக்கு நின்றதால் ஸ்டாலின் அந்த முயற்சியைக் கைவிட்டார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் பாமகவினர், “தேர்தல் பிரச்சாரத்தில்கூட, இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து எவ்வித வாக்குறுதியும் ஸ்டாலின் அளிக்கவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவிடத்துக்கு தன்னை வரவிடாமல் செய்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு நினைவு அரங்கம் கட்டுவதற்கும், இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் நினைவு மணிமண்டபம் கட்டுவதற்குமான முயற்சிகளை முன்னெடுத்தார் ஸ்டாலின்.
ஆனால் இதையெல்லாம் செய்பவர், வன்னியர் உள் இடஒதுக்கீட்டு விஷயத்தில் விரைந்து செயல்பட்டு அதை அமல்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். இதனிடையே, மணிமண்டப திறப்பு விழாவின் போது, வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை முதல்வர் அறிவிக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். இந்த விழாவில் கலந்துகொள்ள ராமதாஸுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி.
» உனக்கென்ன உனக்கென்ன... - ஐபிஎல் ஏலமும் நெட்டிசன்களும்!
» நாகார்ஜுனாவின் 2-வது மகன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம்!
இதற்கு நடுவே, “ராமதாஸூக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டுக்கொண்டுள்ளார்” என முதல்வர் காட்டமாக கருத்துச் சொன்னதும் வன்னியர் வட்டாரத்தில் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது. ‘மருத்துவர் ராமதாஸுக்கு மக்கள் நலன் குறித்து சிந்திப்பதும், அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதும் தான் வேலை’ என பதில் கொடுத்திருக்கிறார் அன்புமணி துபாயில் இருக்கும் மருத்துவர் ராமதாஸ் 28-ம் தேதி தான் தமிழகம் திரும்புகிறார்.
இந்த நிலையில், விழுப்புரம் விழாவில் வன்னியர் இட ஒதுக்கீட்ட அறிவிக்க வேண்டும் என பாமகவினர் ஒன்றியம் வாரியாக தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவெடுத்துள்ளனர். இத்தகைய சூழலில், விழாவில் பாமக பங்கெடுக்குமா என பாமக சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டதற்கு, “வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சிறு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இப்படியான சூழலில் மணிமண்டபம் திறப்பதாக கூறி சமூகநீதி தொடர்பான எங்களின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியாக இது மாறிவிடக் கூடாது. இந்த விஷயத்தில் வன்னியர்கள் இப்போது விழிப்பாக உள்ளனர். இட ஒதுக்கீடு தொடர்பான மருத்துவர் ராமதாஸின் கடிதத்திற்கு அரசின் பதிலைப் பொறுத்தே பாமக இந்த விழாவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கும்” என்றார்.
கடந்த இரண்டு நாட்களாக வன்னியர் பகுதிகளில் நடக்கும் போராட்டங்களைப் பார்த்தால் பாமக இந்த விழாவில் பங்கேற்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இப்போதைக்குத் தோன்றவில்லை!
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago