சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார். சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தனர். இதுதொடர்பாக நேற்று காலை 10 மணிக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்செரிச்சல் (அசிடிட்டி) காரணத்தால் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் சக்திகாந்த தாஸ் வீடு திரும்பினார்.
அமைச்சர் கே.என்.நேரு: திமுக முதன்மை செயலாளர் மற்றும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு சில தினங்களாக லேசான காய்ச்சல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் அதிகமானதுடன், உடல் சோர்வும் ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் கே.என்.நேரு வீடு திரும்பினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago