நீ​தித்​துறை மீதான நம்பிக்கையை காக்க ஊழலை ஊக்கு​விக்​காதீர்கள்: தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை: நீதித்​துறை மீது மக்கள் வைத்​துள்ள நம்பிக்கையை காப்​பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்கு​விக்​காதீர்கள் என இளம் வழக்​கறிஞர்​களுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் அறிவுரை வழங்​கினார். தமிழ்​நாடு மற்றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் சார்​பில் அரசி​யலமைப்பு சட்டதின விழா மற்றும் 1,200 புதிய வழக்​கறிஞர்கள் பார் கவுன்​சிலில் பதிவு செய்​யும் நிகழ்வு, சென்னை உயர் நீதி​மன்ற கலையரங்​கில் நேற்று மாலை நடைபெற்​றது.

இந்நிகழ்​வில் பார் கவுன்​சில் தலைவர் பி.எஸ்​.அமல்​ராஜ் வரவேற்​றார். புதிய வழக்​கறிஞர்​களாக பதிவு செய்​யும் நிகழ்வை வழக்​கறிஞர் ஜாகிர் ஹூசைன் தொடங்கி வைக்க, என்ரோல் ​மெண்ட் கமிட்டி தலைவர் வழக்​கறிஞர் கே.பாலு இளம் வழக்​கறிஞர்​களுக்கான உறுதி​மொழியை வாசித்தார்.

சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் சிறப்பு விருந்​தினராக பங்கேற்று, அரசி​யலமைப்பு சட்ட தின உறுதி​மொழியை வாசிக்க அனைவரும் உறுதி​மொழி எடுத்​துக்​கொண்​டனர். பின்னர் அவர் பேசி​ய​தாவது: அரசி​யலமைப்பு சட்ட தினத்​தன்று இளம் வழக்​கறிஞர்​களாக பதிவு செய்​துள்ள உங்களுக்கு எனது மனப்​பூர்வமான வாழ்த்து​கள். நீதித்​துறை​யில் எண்ணற்ற வாய்ப்புகள் கொட்​டிக் கிடக்​கின்றன. எந்த துறையை தேர்வு செய்வது என்பதை நீங்​கள்​தான் முடிவு செய்ய வேண்​டும். நீதித்​துறை மீது மக்கள் அலாதியான நம்பிக்கை வைத்​துள்ளனர்.

அந்த நம்பிக்கையை நீங்கள் காப்​பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்கு​விக்​காதீர்​கள். கட்சிக்​காரரும், நீதிப​தி​யும் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்​டும். அந்தளவுக்கு நீங்கள் நன்ம​திப்பை சம்பா​திக்க வேண்​டும். கட்சிக்​காரர்​களின் ரகசியம் உங்களின் நிழலுக்​குக்கூட தெரி​யாமல் பார்த்​துக்​கொள்ள வேண்​டும். பணம், பணம் என எப்போதும் ஓடாதீர்​கள். தொழில் எவ்வளவு முக்​கியமோ அதைவிட முக்​கியம் உங்களது பெற்​றோர். அவர்​களு​ட​னும் நேரத்தை செலவிடுங்​கள்.

நீதித்​துறை​யின் மாண்பு, மரியாதைக்கு ஒருபோதும் பங்கம் ஏற்பட்டு​விடாமல் நேர்​மை​யுட​னும், ஒழுக்​கத்​துட​னும் திறம்பட செயலாற்றுங்​கள். உலக நடப்புகளை அலசி ஆராய நாளிதழ் வாசிக்​கும் பழக்​கத்தை பழக்​க​மாக்​கிக் கொள்​ளுங்​கள். வாழ்​நாளில் ஒரு குழந்தைக்​காவது இலவச கல்வி அளிக்க வேண்​டும் என்பதை வாழ்​நாள் லட்சி​யமாக எடுத்​துக் கொள்​ளுங்​கள்.

மகாபாரத காலத்​தில் இருந்தே எதிராளி​களின் உணர்​வு​களுக்​கும் மதிப்​பளிக்​கும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. அதை கடைபிடி​யுங்​கள். அரசி​யலமைப்பு சட்டம் தந்துள்ள கடமை​களை​யும், உரிமை​களை​யும் நிலைநாட்ட ஏழை, எளிய மக்களுக்காக சேவை​யாற்றுங்​கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்​வில் உயர் நீதி​மன்ற நீதிப​திகள் என். சதீஷ்கு​மார், எம்.தண்​டபாணி, அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​. ராமன், அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர், அகில இந்திய பார் கவுன்​சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன், முன்​னாள் நீதிபதி கே.என்​.பாஷா, மூத்த வழக்​கறிஞர் எஸ்.ரவி, பார் கவுன்​சில் துணைத் தலைவர் வேணு.​கார்த்திக்​கேயன், பார் கவுன்​சில் உறுப்​பினர்கள் ஜி.மோக​னகிருஷ்ணன், எம்​.வேல்​முரு​கன், ஜி.​தாளை​முத்​தரசு உட்பட பலர் பங்​கேற்​றனர். பார் க​வுன்​சில் உறுப்​பினர் ஜெ.பிரிஸில்லா பாண்​டியன் நன்றி கூறினார். பார் க​வுன்​சில் உறுப்​பினர் டி.சர​வணன் நிகழ்​வை தொகுத்​து வழங்​கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்