தேசிய சட்ட நாளையொட்டி முதல்வர் தலைமையில் அரசமைப்பு முகப்புரை வாசிப்பு: அரசு, கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய சட்ட நாளை​யொட்டி அரசு அலுவல​கங்​கள், கட்சி அலுவல​கங்​களில் உறுதி​மொழி ஏற்கப்​பட்​டது.

இந்திய அரசி​யலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் 75-ம் ஆண்டு நாளை​யொட்டி சென்னை தலைமை செயல​கத்​தில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்​கப்​பட்​டது.

இந்நிகழ்​வில் நீர்​வளத் துறை அமைச்சர் துரை​முருகன் உள்ளிட்ட அமைச்​சர்​கள், தலைமைச் செயலர் நா.முரு​கானந்​தம், துறை செயலர்​கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்​து​கொண்​டனர். பூந்​தமல்லி அருகே தண்டலத்​தில் உள்ள தனியார் நிகர்​நிலைபல்கலைக்​கழகம் சார்​பில் நடைபெற்ற தேசிய சட்ட நாள் கருத்​தரங்​கில் ஆளுநர் ஆர்.என்​.ரவி பங்கேற்று சிறப்பு​ரை​யாற்றினார். இந்நிகழ்​வில், பல்கலைக்கழக வேந்தர் என்.எம்.வீரையன் உள்ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

சென்னை ரிப்பன் மாளி​கை​யில் மாநக​ராட்சி சார்​பில் இந்திய அரசி​யலமைப்புச் சட்டத்​தின் முகப்பு​ரை​யினை கூடுதல் ஆணையர் (சுகா​தா​ரம்) வி.ஜெயசந்திரபானுரெட்டி தலைமை​யில் மாநக​ராட்சி அலுவலர்​கள், பணியாளர்கள் வாசித்தனர். பாஜக மாநில தலைமை​யிடமான கமலால​யத்​தில் வழக்​கறிஞர் அணி சார்​பில் மாநிலத் துணைத்​தலைவர் ஆர்.சி.பால்​க​னக​ராஜ் தலைமை​யில் வழக்​கறிஞர்கள் இந்திய அரசி​யலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் உருவப்​படத்​துக்கு மாலை அணிவித்து உறுதி​மொழி ஏற்றனர்.

தமிழக காங்​கிரஸ் சார்​பில் சத்தி​யமூர்த்தி பவனில் நடந்த உறுதி​யேற்பு நிகழ்ச்​சி​யில், தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்​தகை, தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் ஆணையத்​தின் முன்​னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வழக்​கறிஞர்கள் கலந்​து​கொண்​டனர். சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவல​கத்​தில் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் தலைமை​யில் அரசி​யலமைப்பு சட்ட தின உறுதி​மொழி ஏற்கப்​பட்​டது. அசோக்​நகரில் உள்ள விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி தலைமை அலுவல​கத்​தில் அரசமைப்புச் சட்டம் குறித்த நூல்கள் வெளி​யீடு நிகழ்ச்சி நடைபெற்​றது. இதில், விசிக தலைவர் திரு​மாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்​து​கொண்டனர். தேசிய சட்ட நாள் குறித்து அரசியல் தலைவர்கள் விடுத்த அறிக்கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை: இந்திய அரசி​யலமைப்பு தினம் கொண்​டாடப்​படும் இந்நாளில், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்​பிகள் வலியுறுத்திய மதிப்​பீடுகளை உறுதி​யோடும், நேர்​மையோடும் நிலைநிறுத்து​வோம் என்று உறுதி​யேற்​போம். எதிர்க்​கட்​சித் தலைவர் பழனிசாமி: அரசியல் சாசன தினமாக கொண்​டாப்​படும் இந்த வேளை​யில், நமது இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் முகப்​பில் பொறிக்​கப்​பட்​டுள்ள அனைத்து தன்மை​களை​யும் பேணிக்​காக்க உறுதி​யேற்​போம்.

பாமக நிறு​வனர் ராமதாஸ்: இந்தியாவை இயக்குவது அரசி​யலமைப்புச் சட்டம்​தான். இறையாண்மை அளிப்​பதும் இச்சட்​டம்​தான். அத்தகைய சிறப்புமிக்க அரசியல் சட்டத்தை மதித்து நடப்​போம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்​ஹாசன்: இந்திய அரசி​யலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அந்த 299 பெரு​மக்​களைப் பெரு​மைப்​படுத்​தும் விதமாக இன்னும் நிறைவேறாத புதிய இந்தியா​வுக்கான கனவுகளை நனவாக்க உழைப்​போம். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​துள்ளனர்.

இதே​போல், பாமக தலை​வர் அன்​புமணி, தே​மு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா ​விஜய​காந்த், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், மனிதநேய மக்​கள் கட்​சித் தலை​வர் எம்​.எச்​.ஜவாஹிருல்லா உள்​ளிட்​டோரும் தேசிய சட்ட நாளை ​போற்​றுவோம்​ என தெரி​வித்​துள்​ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்