கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது, நாளை (நவ.27) புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தமிழகம் நோக்கி நகரும் என்றும், இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கடலூர் மாவட்டத்திற்கு இன்று (நவ.26) செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு ஆலர்ட்டும், நாளை (27) புதன்கிழமை ரெட் அலர்ட்-டும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று கடலூர் மாவட்டத்தில் கடல் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், கடலூர் மாவட்டத்தில் இன்று (நவ.26) காலை முதல் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் நடைப்பாதை வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
» டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
» “தவறு இருப்பின் நடவடிக்கை” - பாடகர் இசைவாணி குறித்து அமைச்சர் சேகர்பாபு
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும், மீனவர்களின் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனிடையே, ஆரஞ்சு ஆலர்ட் விடுக்கப்பட்டும் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட்டதால் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago