ராமதாஸ் கருத்துக்கு தரக்குறைவாக பதில் அளிப்பதா? - முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக, பாஜக தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: அ​தானி ஊழலில் தமிழ்​நாடு மின்சார வாரி​யத்​தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் வலியுறுத்​தி​யிருந்​தார். இதுகுறித்து செய்தி​யாளர்கள் முதல்வர் ஸ்டா​லினிடம் கேள்வி எழுப்​பி​யிருந்​தனர்.

இதற்கு பதிலளித்த அவர், ராமதாஸுக்கு வேறு வேலை இல்லாத​தால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்​டிருக்​கிறார். அவருக்​கெல்​லாம் நான் பதில் சொல்லி கொண்​டிருக்க முடி​யாது என கூறி​யிருந்​தார். தற்போது இதற்கு பாமக, பாஜக கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரி​வித்​துள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி: மு.க.ஸ்​டா​லினுக்கு வேண்​டு​மானால் அதானிகளை ரகசி​யமாக சந்திப்பது போன்ற ஏராளமான வேலைகள் இருக்​கலாம். ஆனால், ராமதாஸுக்கு மக்கள் நலன் குறித்து சிந்​திப்​பதும், அரசின் குறைகளை சுட்​டிக் காட்டு​வதும்​தான் வேலை. ராம​தாஸ் செய்த பணிகளால் தான் தமிழகத்​தி​லும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்​கீடுகள் வென்​றெடுக்​கப்​பட்டன. தமிழகத்​தில் 3,321 மதுக்​கடைகளும், தேசிய அளவில் 90 ஆயிரம் மதுக்​கடைகளும் மூடப்​பட்டன. அவர் கைகாட்​டிய​தால்​தான் கருணாநிதி உடலை மெரினா கடற்​கரை​யில் அடக்கம் செய்து நினை​விடம் கட்ட முடிந்​தது. தமிழகத்​துக்கு முதல்வர் மு.க.ஸ்​டா​லினால் விளைந்த ஒரு நன்மையை கூற முடி​யு​மா? பதவிக்​கேற்ற பக்கு​வத்​தை​யும், பணிவை​யும் முதல்வர் வளர்த்​துக் கொள்ள வேண்​டும். ராமதாஸ் குறித்து தெரி​வித்த கருத்​துக்காக பொது வெளி​யில் மன்னிப்பு கேட்க வேண்​டும். அதானி ஊழலில் மின்​வாரிய தொடர்பு குறித்து பணியில் உள்ள நீதிப​தியை கொண்டு விசா​ரிக்க முதல்வர் ஆணையிட வேண்​டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: அதானி நிறு​வனத்​துடன் திமுக தொடர்பு குறித்து, தமிழகத்​தின் மூத்த அரசியல் தலைவரும் பாமக நிறு​வனருமான ராமதாஸ் கேள்வி எழுப்​பியதற்கு, தரக்​குறைவான முறை​யில் முதல்வர் ஸ்டா​லின் பதிலளித்​திருப்பது முற்றி​லும் கண்டிக்​கத்​தக்​கது. ராமதாஸ் கேட்​டிருக்​கும் கேள்​வி​யின் உண்மையை எதிர்​கொள்ள இயலாமல், இது போன்ற தரக்​குறைவான, முற்றி​லும் ஏற்கத் தகாத முறை​யில் பதிலளித்​திருப்​பது, முதல்​வரின் இயலாமை​யைத்​தான் காட்டு​கிறது. அவர் வகிக்​கும் முதல்வர் பதவிக்கு அது அழகல்ல.

தமிழக பாஜக முன்​னாள் தலைவர் தமிழிசை: நீங்கள் எதிர்க்​கட்​சித் தலைவராக இருக்​கும்​போது கூறிய கருத்​துகள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலை​யில்​லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்​துகளா. ராமதாஸ் போன்ற அனுபவ​மிக்க தலைவர்​களின் கருத்தை வழி​காட்டு​தலாக எடுத்​துக் ​கொள்ள வேண்​டுமே தவிர, பழி சொல்​வதாக எடுத்​துக்​கொள்​ளக் கூடாது. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்