தமிழக சட்டப்பேரவை டிச.9-ல் கூடுகிறது - பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

By கி.கணேஷ்

சென்னை: தமிழக சட்டப்பேரவை வரும் டிச.9-ம் தேதி கூடுகிறது. கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும், என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலவைர் அப்பாவு இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை விதியின்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது, வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்.

அலுவலர் ஆய்வுக் குழுவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். எனவே அவர்கள்தான், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வர். சட்டமன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நேரலை செய்யப்படுகிறது. கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் வருகைக்ககுப் பிறகுதான், நேரலை ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் ஏஐ தொழில் நுட்பத்தில் முதன்மை மாநிலமாக உள்ளது.மாணவர்களுக்கு இது பயனளிக்கும் அதேபோல் சட்டபரேவையிலும் காதிகமில்லாத முறைதான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தொடரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, அரசு ஊழியர்கள் கோரிக்கை, தேர்தல் வாக்குறுதிகள், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்