தமிழகத்தில் ஆபத்துக்கு கைகொடுக்காதா ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம்

By சி.கண்ணன்

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம், தமிழகத்தில் அமலுக்கு வராததால் இத்திட்டத்தில் காப்பீட்டு அட்டை பெற்றிருந்தும் சீனியர் சிட்டிசன்கள் சிகிச்சை பெற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்பீட்டுத் திட்டத்​துடன், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ என்ற திட்டமும் ஒருங்​கிணைத்து செயல்​படுத்​தப்​படு​கிறது.

முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியின் குடும்பத்​துக்கு ஆண்டுக்கு ரூ.5 காப்பீட்டுத் தொகை வழங்கப்​படு​கிறது. இதற்கான ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம். இத்திட்​டத்தில் 1 கோடியே 45 லட்சம் குடும்​பங்கள் இணைந்​துள்ளன. தனியார் மருத்​துவ​மனை​களில் ஏழைகள் உயர்தர சிகிச்சை பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், காலப்​போக்கில் அரசு மருத்​துவ​மனை​களுக்கும் விரிவுபடுத்​தப்​பட்டது.

ஆனால், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்​துள்ள பெரும்​பாலான தனியார் மருத்​துவ​மனை​களில் பெரும்​பாலும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்​சையளிக்க மறுக்​கிறார்கள். சிலர், “நாங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த நோய்க்கு மட்டும் தான் சிகிச்​சையளிப்​போம்” எனவும் தட்டிக் கழிக்​கிறார்கள்.

இந்நிலை​யில், 70 வயது மூத்த குடிமக்​களுக்காக ரூ.5 லட்சம் மதிப்​பிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், எவ்வித வருமான வரம்புமின்றி அரசு மற்றும் தனியார் மருத்​துவ​மனை​களில் கட்டணமின்றி சிகிச்சை பெறமுடி​யும். ஆனால், தமிழகத்தில் ஆயுஷ் மான் பாரத் திட்டம் பயன்பாட்டுக்கு வராததால், இத்திட்​டத்தில் காப்பீடு அட்டை பெற்றும் மூத்த குடிமக்​களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்​டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் அருண் தம்பு​ராஜ், “ஆயுஷ்மான் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு​தலுக்காக காத்திருக்​கிறோம். தமிழகத்தில் அமலில் உள்ள முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்​ட​வர்​களும், இந்த புதிய காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும். அதேபோல், மூத்த குடிமக்​களுக்கான காப்பீட்டு திட்டத்தில் புதிதாக இணைந்​தவர்​களும் பயன் பெறலாம்” என்றார்.

மருத்​துவர்களோ, “காப்​பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்​துவ​மனை​களில் சிகிச்​சைக்காக காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் தொகை மிகவும் குறைவாக இருப்​ப​தால், மீதி தொகையை நோயாளி​களிடம் கேட்கிறார்கள். இதில் பிரச்சினை வருவதால் சில தனியார் மருத்​துவ​மனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்​சையளிக்க மறுக்​கிறார்கள். இதுவே, அரசு மருத்​துவ​மனை​களில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்​சைபெற்றால் அதன் மூலம் கிடைக்கும் காப்பீட்டு தொகையானது மருத்​துவ​மனை​களின் மேம்பாட்டுக்​கும், சிகிச்​சையளித்த மருத்​துவக் குழுவுக்கும் பகிர்ந்​தளிக்​கப்​படு​கிறது.

பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைபவர்கள் பெரும்​பாலும் தனியார் மருத்​துவ​மனை​களிலேயே சிகிச்சை பெற விரும்​பு​கின்​றனர். இத்திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் தான் எவ்வித சிரமமும் இன்றி மூத்த குடிமக்​களால் தனியார் மருத்​துவ​மனை​களில் சிகிச்சை பெறமுடிகிறதா என்பது தெரியும்” என்றனர். நல்ல நோக்கத்​துக்காக கொண்டு​வரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை செயல்​படுத்து​வதற்கான தடைகளை நீக்கி தமிழகத்து மூத்த குடிமக்​களையும் ​முகம் மலரச் செய்​யட்​டும் தமிழக அரசு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்