சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, டெல்லிக்கு புறப்பட்டு சென்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது; நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, தமிழக பிரச்சினை, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்துவோம். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் இந்தியை திணித்துக் கொண்டு இருக்கிறது. பொங்கல் நாளில், சிஏ பவுண்டேஷன் தேர்வு நடக்கவுள்ளது.
பாஜக அரசு, தமிழக மக்களின் உணர்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில் தேசிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும். அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, முதல்வரிடம் தெரிவித்துவிட்டு, அவருடைய ஆலோசனையின்படி, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago