‘முதல்வரின் புத்தாய்வு திட்டத்தில்’ பணியாற்ற தேர்வு: இளம் வல்லுநர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: ‘முதல்வரின் புத்தாய்வுத் திட்ட’த்தின் கீழ் 2024-26 ஆண்டுகளுக்கு பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ள 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில், பல்வேறு தொழில் மற்றும் கல்வி பின்புலம் சார்ந்த இளம் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தி கொள்ள, ‘முதல்வரின் புத்தாய்வுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2022-24-ம் ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அரசின் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகளில் 2 ஆண்டுகளுக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் 2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த 19 பேருக்கு ‘பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில்’ முதுகலை சான்றிதழ்களை கடந்த அக்டோபர் மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து ‘முதல்வரின் புத்தாய்வுத் திட்ட’த்தின் கீழ் 2024-26 ஆண்டுகளுக்கு செயல்படுத்த 25 இளம் வல்லுநர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி கணினி அடிப்படையிலான முதல்கட்ட தேர்வு, விரிவான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல்கட்ட தேர்வில் 5,327 பேர் பங்கேற்ற நிலையில், அதிலிருந்து 501 பேருக்கு விரிவான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட 177 பேருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வான 25 இளம் வல்லுநர்களின் இறுதிப்பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளம் வல்லுநர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், “முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தில் 2024-26-ம் ஆண்டுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுநர்களுக்கு எனது வாழ்த்துகள். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மதிப்புமிக்க இந்த முயற்சியின் மூலம் ஒவ்வொருவரும் கற்று, முன்னேறி வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்