சென்னை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை ஆய்வு மேற்கொள்ளும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், வயநாடு இடைத்தேர்தல் பற்றி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2.5 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று முன்னிலையில் உள்ளார். அவர் மகத்தான வெற்றி பெறுவார். மகாராஷ்டிராவில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் பற்றி ஒரு தகவலை சொல்லியிருக்கிறார். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் வாக்கு சதவீதம் துல்லியமாகத் தெரிந்துவிடும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில், 2 தினங்கள் கழித்து 6 சதவீதம் வாக்குகள் அதிகமாகப் பதிவாகி இருப்பதாகத் தெரிவித்திருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. இன்னும் 2 நாட்களில் இதுகுறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்படும்.
மகாராஷ்டிரா தோல்வி குறித்து: ஆய்வு செய்வோம். பாஜக கொடுத்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றி இருக்கிறார்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பேன் என்றார்கள். இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவோம் என தெரிவித்தார்கள். எதையும் செய்யவில்லை. அதானியை பெரும் பணக்காரர் ஆக்கியதுதான் அவர்களது சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago