விஜய வரதராஜர் கோயி​லில் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்​டும்: அறநிலைய துறைக்கு நீதி​மன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: செங்​கல்​பட்டு அருகே பாபுராயன்​ பேட்​டை​யில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயி​லில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க அறநிலையத் துறைக்கு உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் தாக்கல் செய்திருந்த மனுவில், “செங்​கை மாவட்டம் பாபுராயன்​ பேட்​டை​யில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயில் அறநிலையத் துறை​யின் கட்டுப்​பாட்​டில் உள்ளது.

வடகலை வைணவ சம்பிர​தாயப்படி இந்த கோயி​லில் திருப்​பணிகளை மேற்​கொண்டு, சம்ப்​ரோக் ஷணம் நடத்த அறநிலையத் துறைக்கு வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இந்த கோயி​லில் சம்ப்​ரோஷணம் நடத்த 12 வாரங்​களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, கடந்த 2020-ம் ஆண்டு அறநிலையத் துறைக்கு உத்தர​விட்​டது. ஆனால் இந்த உத்தரவை அமல்​படுத்​தவில்லை எனக் கூறி வழக்​கறிஞர் பி.ஜெகந்​நாத் அவமதிப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்​தில்​கு​மார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்தது.

அப்போது வழக்​கறிஞர் ஜெகந்​நாத் ஆஜராகி, “மிக​வும் பழமையான இந்தக் கோயில் தற்போது சிதிலமடைந்த நிலை​யில் உள்ளது. சம்ப்​ரோஷணம் நடத்த உயர் நீதி​மன்றம் உத்தர​விட்டு 4 ஆண்டு​களாகி​யும் இன்னும் எந்த நடவடிக்கை​யும் எடுக்க​வில்லை, என குற்​றம்​சாட்டி கோயி​லின் தற்போதைய நிலை குறித்த புகைப்​படங்களை தாக்கல் செய்​தார். அதைப் பார்த்த நீதிப​தி​கள், அறநிலையத் துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தர​விட்​டனர்.

அப்போது அறநிலையத் துறை ஆணையர் பி.என்​.ஸ்ரீதர் காணொலியில் ஆஜரானார். அறநிலையத் துறை தரப்​பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்​கறிஞர் ஜெ.ரவீந்​திரன், சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்.ஆர்​.ஆர்​.அருண் நடராஜன் ஆகியோர், இந்தக் கோயில் முழு​மையாக ஆய்வு செய்​யப்​பட்டு ஒரு வாரத்​தில் சீரமைப்பு பணிகள் தொடங்​கும். அதேபோல பணிகள் விரைவாக முடிக்​கப்​பட்டு அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்​படும் என்றனர்.

இதையடுத்து நீதிப​தி​கள், இந்த நீதி​மன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 2 ஆண்டு​களாக நிலுவை​யில் இருந்து வருகிறது. இந்த வழக்​கில் கடந்த 2020-ம் ஆண்டு சம்ப்​ரோஷணம் நடத்த உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. ஆனால் அறநிலையத் துறை அதிகாரிகள் அதை நிறைவேற்​றாதது கடும் கண்டனத்​துக்​குரியது. விஜய வரதராஜப் பெரு​மாள் கோயில் பாது​காக்​கப்பட வேண்டிய பழமையான பாரம்​பரிய நினை​வுச் சின்னம் மட்டுமின்றி தேசிய சொத்​தும் கூட. ஆனால் இந்தக் கோயில் செடி, கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்து கிடக்​கிறது.

இந்தக் கோயிலை பாது​காக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கை​யும் எடுக்​காதது துரதிருஷ்ட​வச​மானது. உயர் நீதி​மன்றம் பிறப்​பிக்​கும் உத்தர​வுகளை அதிகாரிகள் நிறைவேற்​றா​விட்​டால் அறநிலையத் துறை ஆணையரை பதவி நீக்கம் செய்​ய​வும், இணை ஆணையருக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்றும் கடுமையான உத்தர​வுகளை பிறப்​பிக்க நேரிடும்.

எனவே அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக இந்தக் கோயி​லில் ஆய்வு மேற்​கொண்டு சீரமைப்பு பணிகளைத் தொடங்க வேண்​டும். பணிகள் நடக்​கிறதா என்பதை மனுதா​ரரும் அவ்வப்​போது ஆய்வு செய்து புகைப்​படங்களை நீதி​மன்​றத்​துக்கு சமர்ப்​பிக்க வேண்​டும். இந்த வழக்​கில் அறநிலைய துறை ஆணையர் தரப்​பில் பதில் அளிக்க வேண்​டும், என உத்தர​விட்டு விசா​ரணையை நவ.29-க்கு தள்ளி வைத்​துள்ளனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்