2025-ம் ஆண்டில் 24 அரசு விடுமுறை நாட்கள்: அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: அடுத்த 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை​களுடன் 24 நாட்கள் அரசு விடு​முறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்​துள்ளது.

ஆண்டு​தோறும், தமிழக அரசின் சார்​பில் சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமைகள் அரசு விடு​முறை நாட்கள் தவிர, இதர பொது விடு​முறை தினங்கள் அறிவிக்​கப்​படும்.

அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, செலாவணி முறிச்​சட்​டத்​தின் அடிப்​படை​யில், தமிழக அரசின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து அலுவல​கங்​களும் 2025-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களும் மூடப்பட வேண்​டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடு​முறை நாட்​களின் விவரங்களும் அறிவிக்​கப்​பட்டுள்ளன.

இதில், ஏப்ரல் 1-ம் தேதி திங்கள் கிழமை விடு​முறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கி​களுக்கு மட்டுமே பொருந்​தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்​துறை நிறு​வனங்​கள், கழகங்​கள், வாரி​யங்கள் முதலிய​வற்றுக்கும் பொருந்​தும்.
விடு​முறையை பொறுத்​தவரை, இந்த ஆண்டில் நவம்பர் மாதத்​தில் பொதுவான சனி, ஞாயிறு விடு​முறை நாட்​களைத் தவிர வேறு அரசு விடு​முறை என்பது இல்லை.

3 நாள் தொடர் விடு​முறை: ரம்ஜான், தமிழ்ப்புத்​தாண்டு, தீபாவளி பண்டிகை ஆகியவை திங்கள் கிழமை​களில் வருவ​தால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்​கும். மேலும், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளி, சனிக்​கிழமை​களில் வருவ​தால் 3 நாள் தொடர் விடு​முறையாக அமைகிறது.

மேலும் இந்தாண்டு, குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, பக்​ரீத் பண்டிகை, மொகரம், கிருஷ்ண ஜெயந்தி சனி, ஞா​யிறு ​விடு​முறை ​தினங்களில் வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்