சென்னை: சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ் ணன் கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கட்சி அணிகளும், அனைத்து தரப்பு பொது மக்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொள்ள வேண்டும் என. அக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago