தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட் ஏன்? - ஆளுநர் உத்தரவின் முழு விவரம்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக ஆளுநர் உத்தரவில் முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் வி.திருவள்ளுவன். அவரது பதவிக்காலம் டிசம்பர் 12-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், அவரை கடந்த 19-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். துணைவேந்தர் திருவள்ளுவன் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ள உத்தரவில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கான முழு விவரமும் இடம்பெற்றுள்ளது.

அந்த உத்தரவின் விவரம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் விதிமுறைகளை மீறி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வேந்தருக்கு புகார் வரப்பெற்றது. அந்த புகார் மீது விசாரணை நடத்தவும் , சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்த குதியை ஆய்வு செய்யவும் ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறு துணைவேந்தருக்கு வேந்தர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, அமைக்கப்பட்ட நிபுணர்வு குழுவின் அறிக்கையை துணைவேந்தர் 11.8.2021 அன்று வேந்தரிடம் சமர்ப்பித்தார். விதிமுறைகளை மீறி ஆசிரியர்கள் நியமனம் நடந்திருப்பது அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி ஆசிரியர் நியமனம் நடந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்குமாறு துணைவேந்தருக்கு வேந்தர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணைவேந்தர் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன்படி, முறைகேடான நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையில் இருந்து துணைவேந்தர் தவறிவிட்டார். இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், துணைவேந்தர் திருவள்ளுவன் உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 27.10.2023 அன்று தகுதிகாண் பருவ நிறைவு வழங்கியுள்ளார். ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பதற்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு 3.10.2024 அன்று விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு கடந்த 16.10.2024 அன்று பதில் அளித்துள்ள துணைவேந்தர், நோட்டீஸ் குறித்து விளக்கம் அளிப்பதாக கூறியுள்ளார். அவர் அளித்த விளக்கம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், சட்டவிரோத நியமனம் தொடர்பாக துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், விதிமுறைகளை மீறி அந்த ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவ நிறைவு வழங்கியதும் தெரிய வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வேந்தர் கருதுகிறார். இந்த சட்ட விரோத நியமனத்தில் பாரபட்சமில்லாத விசாரணை நடைபெற வேண்டியுள்ளதால் பின்வரும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 40 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் நியமிக்கப்படுகிறார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்