காரைக்குடியில் விமான நிலையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

By கி.மகாராஜன் 


மதுரை: காரைக்குடியில் விமான நிலையம் அமைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருச்சியை சேர்ந்த சிவா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: செட்டிநாட்டில் 1907 ஏக்கரில் கால்நடைபண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் 2-வது உலகப் போரின் போது அமைக்கப்பட்ட 2 விமான ஓடுதளங்கள் உள்ளன. காரைக்குடியை சுற்றி பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, கானாடுகாத்தான் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு வெளி மாநிலத்தினர், வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர் பல்வேறு வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இப்பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை, மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் அமைந்துள்ளதால் விஞ்ஞானிகள், மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய அரசு உயர் அதிகாரிகளும் வந்து செல்கின்றனர். செட்டிநாடு பலகார வகைகள், கண்டாங்கி சேலைகள், ஆத்தங்குடி டைல்ஸ் போன்றவை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தோரும் சினிமா படப்பிடிப்புக்காக காரைக்குடி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.இதனால் காரைக்குடி பகுதியில் விமான நிலையம் அமைத்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும். இப்பகுதியில் தொழில் துறை நிறுவனங்கள், ஐடி, நிறுவனங்கள் தொடங்கப்பட வாய்ப்பு உருவாகும். எனவே, காரைக்குடி கானாடுகாத்தான் விமான நிலைய ஓடுதள பாதையை சீரமைத்து, காரைக்குடியில் விமான நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள், எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், காரைக்குடி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து கொள்கை ரீதியாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு குறித்த கேள்வி எழவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்