நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அக்கட்சியிலிருந்து விலகி வருவது அண்மைக்காலமாக தொடர் நிகழ்வாகி வருகிறது. திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தங்களது குறைகளைச் சொன்ன நிர்வாகிகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசியதாகச் சொல்கிறார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்திலிருந்து சில நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது நெல்லை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாவுக்கு தலைமை ஏஜென்டாக இருந்தவர் நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வின். இவரும் இவரது ஆதரவாளர்களும் சீமானுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த சீமான், “நேர்மையாளன் என்பவன் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வாதிகாரியாக இல்லாவிட்டால் கட்சி நடத்த முடியாது” என்று சமாளித்தார்.
ஏற்கெனவே திருச்சி, மதுரையில் இதேபோல் நாதக நிர்வாகிகள் சிலர் தலைமையை விமர்சித்து கட்சியைவிட்டு வெளியேறி தனி அணியாக திரண்டிருக்கிறார்கள். நவம்பர் 27-ம் தேதி சிதம்பரத்தில் மாவீரர் தின பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த சீமான் தலைமையில் நாதக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு போட்டியாக அதே நாளில் திருச்சியில் மாவீரர் தின பொதுக்கூட்டத்தை நடத்த அதிருப்தி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருச்சி மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிரான அதிருப்தியாளர்களை பங்கேற்க வைக்க மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறது அதிருப்தி கோஷ்டி. ஏற்கெனவே, நடிகர் விஜய்யின் வரவால் நாதக ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துவிடுமோ என பயந்து போயிருக்கிறது சீமான் தரப்பு. அந்தப் பதற்றத்தில், ‘லாரி அடித்துச் சாவான்’ என்கிற அளவுக்கு விஜய்க்கு எதிராக உக்ரமாகி இருக்கிறார் சீமான்.
» என்ன நடக்கிறது தஞ்சை தமிழ் பல்கலை.யில்? - துணைவேந்தர் பணியிடை நீக்கத்தின் பரபர பின்னணி
» 5-வது நாளாக தொடர்ந்து அதிகரித்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.640 உயர்வு
இந்த நிலையில், சொந்தக் கட்சிக்குள்ளேயும் குடைச்சல் கிளம்பி இருப்பதால் மேலும் தகித்துக் கொண்டிருக்கிறார் செந்தமிழன். அதேசமயம், தமிழக அரசியலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்து வரும் சீமானின் கட்சியை சிதைக்க ஆளும் கட்சி தரப்பில் சில சித்து வேலைகள் நடப்பதாகவும் நாதக தரப்பில் பல்லைக் கடிக்கிறார்கள்.
இதுகுறித்து திருநெல்வேலி நாதக நிர்வாகிகளிடம் பேசியபோது, “ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே களமிறங்க முடிவெடுத்து முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தமிழக அரசியலில் வித்தியாசமான பாதையை முன்னெடுத்து வருகிறார் செந்தமிழன் சீமான். அவருக்கு தமிழர்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் ஆளும் கட்சியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதனால், நாதக-வுக்குள் சிலரை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிக்கிறார்கள்.
வடக்கே பாஜகவினர் மாநிலக் கட்சிகளை இரண்டாக்கி, அந்தக் கட்சிகளின் செல்வாக்கை சரித்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அபகரிக்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் செய்யும் தந்திரம் போன்றது தான் இதுவும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதே பாணியில் தான் அதிருப்தியாளர்களுக்கு ‘வேண்டிய’ உதவிகளைச் செய்து திருச்சியில் மாவீரர் தின பொதுக்கூட்டத்தை நடத்த ஆளும் கட்சியினர் உதவி செய்யவேண்டும்” என்றனர். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள்ளாக எந்தெந்த புற்றுகளில் இருந்து எத்தனை பாம்புகள் கிளம்புமோ!
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago