பணி ஓய்வுக்கு 22 நாட்களே இருந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் திடீரென பணி நீக்கம் செய்திருப்பது அறிவுஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில், 2017-2018ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் நியமித்தார்.
இவர்களில் பலருக்கும் உரிய கல்வித் தகுதி இல்லை எனவும், இந்த நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அப்போது சர்ச்சைகள் வெடித்தன. இது தொடர்பாக, பணி ஓய்வுக்குப் பிறகு துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இருந்த போதும் 40 பேரும் பணியில் தொடர்ந்தனர். இதனால், தகுதியற்ற நபர்களை பணியில் அமர்த்தி பல்கலைக்கழகத்துக்கு நிதியிழப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது இதற்கிடையில், 2021-ல் வி.திருவள்ளுவன் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
இவர், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் 40 பேரையும் தகுதி கான் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக தெரிகிறது. இது தொடர்பாக திருவள்ளுவனிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை என்கிறார்கள். மீண்டும் அக்டோபர் 3-ம் தேதி ஆளுநர் அலுவலகம் விளக்கம் கேட்டு திருவள்ளுவனுக்கு மெமோ அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.
» விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன்: எஸ்.ஏ.சி
» “சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 16-ம் தேதி, ‘விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறிய உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?’ என ஆளுநர் தரப்பிலிருந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கும் துணைவேந்தர் தரப்பிலிருந்து உரிய பதிலளிக்கவில்லை என தெரிகிறது.
இதனையடுத்து துணைவேந்தர் திருவள்ளுவனை 20-ம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஆளுநர், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய பல்கலை.
ஊழியர்கள் சிலர், “எதற்காக தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து இப்பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் விலகிச் சென்றுவிட்டது. குறிப்பாக, இங்கு பணியாற்றுபவர்களில் சிலர் சங்கங்களின் பெயரால் செயல்படுவதால் கல்வி போதிக்கும் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது” என்றார்கள்.
பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் நெடுஞ்செழியன் நம்மிடம், “தகுதியற்ற 40 பேர் நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கும், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்த வழக்கும் இன்னும் முடியவில்லை. அப்படி இருக்கையில் 40 பேர் நியமனத்தை ரெகுலரைஸ் செய்வதற்கான நடவடிக்கையில் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார்.
முறைகேடாக நியமனம் பெற்றவர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளாக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததால், தமிழக ஆளுநர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்” என்றார். இதுகுறித்து இடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் திருவள்ளுவனிடம் விளக்கம் பெற அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவரது அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago