சென்னை: தொழிலாளர் நலத்துறையின், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஹூண்டாய் நிறுவனத்தில் நேற்று நடை பெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘இந்தியாவில் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். தொழிலாளர்கள் உயிர்விலை மதிக்க முடியாதது என்பதால் அவர்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை செயலர் கொ.வீரராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் எஸ்.ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் மு.வே.செந்தில்குமார், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அலுவலர் சி.எஸ்.கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago