சென்னை: கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்கக காரணங்களுக்காக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தலா 14 மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, முற்பகல் 11.30,11.41, 12.30, 12.50, பிற்பகல் 3.15, மாலை 4.25, 5.43, 6.35, இரவு 7.57,8.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளன.
மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு காலை 5.12, 6.03, 7.17, 8.19, 9.00, 10.40, முற்பகல் 11.30, 11.40, மதியம் 1.40, பிற்பகல் 2.57, மாலை 4.15, 5.10, 6.26 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளன. இதன் விளைவாக, மின்சார ரயில்களின் நேரம் நவ.22-ம் தேதி முதல் சிறிது மாற்றப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரையிலிருந்து வார நாட்களில் அதிகாலை 3.50, 4.15, 4.55, 5.15, 5.30, 5.50, காலை 6.05, 6.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டை அடையும். இதுபோல, 50 மின்சார ரயில்களின் சேவையில் நேரம் சிறிது மாற்றம் செய்யப்படவுள்ளது.
» நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் கருத்து
» அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி: சென்னை ஐஐடி அறக்கட்டளை ஏற்பாடு
அதுபோல, செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கடற்கரைக்கு வந்தடையும் மின்சார ரயில்களின் நேரம் சிறிது மாற்றம் செய்யப்படும். இதுதவிர, செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில் நேரத்திலும் சிறிது மாற்றம் செய்யப்படவுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago