​முதல்வர் தலைமை​யில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவ.25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவ.25 தொடங்கி டிச.20-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு முடிவெடுத்து, வரும் நவ.24-ம் தேதி அனைத்து கூட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டத்தொடரை பொறுத்தவரை, மத்திய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத்திருத்தம் போன்ற மசோதாக்களை நிறைவேற்றும் முனைப்புடன் உள்ளது. இதற்கு இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமின்றி இதர கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.

இந்ந சூழலில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நவம்பர் 25-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவ.22-ம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அப்போது மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், பல்வேறு விவகாரங்களில் திமுகவின் நிலைப்பாடுகள், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்குவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்