சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தை சேர்ந்தது இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம். இந்த நிறுவனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை ஏலம் எடுத்துள்ளது.
சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் கடந்த நவம்பர் 7-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது ஏலத்தில் மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்துக்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்க மத்திய அரசால் கடந்த ஜூன் 26-ம் தேதி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் நவ.7-ல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago