நாகப்பட்டினம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, டிடிவி.தினகரன் என ஆயிரம் குடும்பங்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள்தான் சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோர். ஆனால், அவர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் என ஆயிரம் குடும்பத்தினர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சியைப்பிடிப்போம் என்று கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருச்சியில் நான் பேசியது வேறு, ஆனால் தொலைக்காட்சிகளில் வந்தது வேறு. கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி, கொமதேக ஈஸ்வரனுக்கு ரூ.15 கோடி என பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago