சேலம்: இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறையாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பொன்.மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. கோயில் கணக்குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனி மனிதர் தவறு செய்தால் தண்டிக்கும் நிலையில், அரசே குற்றமிழைக்கும்போது என்ன செய்வது?
கோயில் பாதுகாப்பு படை: காவல் துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினரை இணைத்து கோயில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. ஆனாலும், 1022 உண்டியல் திருட்டுகள், 248 கோயில்களில் சிலைகள் திருட்டு நடந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருடுபோயுள்ளன. இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை. 2015 முதல் 2018 வரை கோயில் பாதுகாப்பு படைக்கு ரூ.172 கோடி செலவு செய்தும் எந்தப் பலனும் இல்லை.
அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறையாடி வருகிறது. எனவே, உடனடியாக இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும். அறநிலையத் துறை அறமற்ற துறையாக உள்ளது.கோயில் பாதுகாப்புப் படையில் தற்போது முன்னாள் போலீஸாரை சேர்க்கிறார்கள். அவர்கள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுகின்றனர்.
சேலம் ஆறகளூர் கோயில் உள்ள பகுதியை 3-ம் குலோத்துங்க சோழன் ஆட்சிபுரிந்துள்ளார். 1190-களில் கட்டப்பட்டுள்ள அந்தக் கோயிலை அரசு புறக்கணித்து, அதன் பழமையை அழித்து, நவீனமாக்கிவிட்டது. அந்த கோயிலை பாதுகாக்கப்பட்ட, புராதனக் கோயிலாக மாற்றி அறிவிக்க வேண்டும்.
திருப்பணிக்கு வசதியானவர்கள் நிதி கொடுக்கிறார்கள். அவர்களிடம் பணம் வாங்கி திருப்பணி செய்துவிட்டு, கோயில் நிதியில் கணக்கு காட்டி விடுகிறார்கள். கோயில் அர்ச்சகர் மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிறார். ஆனால், அறநிலையத் துறை ஆணையருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. கோயிலைப் பாதுகாத்து, கோயிலுக்காக உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago