திருச்சி: உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது. இதில், தமிழகத்தில் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ. தொலைவுக்கு 14 கடலோர மாவட்டங்களில் 608 மீனவக் கிராமங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப்படகுகள், 41,000 பைபர் படகுகள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீனவர்களுக்காக டீசல் மானியம், மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், தூண்டில் வளைவு, படகு நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள், திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுத்தாலும், மீனவர்களின் துயரம் இன்றளவும் தீர்ந்ததாக இல்லை.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், மீண்டும் கரை திரும்புவோமா என்ற அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடலில் எல்லைக்கோடுகளை நிர்ணயிக்க முடியாது. காற்று வீசும் பாதையில் இழுத்துச் செல்லும் படகுகள், தமிழக பகுதியில் மீன்பிடித்தாலும்கூட எல்லைத் தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதவிர, கடற்கொள்ளையர்களின் தாக்குதல், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்தல் என தமிழக மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது. நிகழாண்டு இதுவரை 497 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 66 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி.ராஜேந்திரன் நாட்டார் கூறியது: 1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த பிறகுதான் இந்திய- இலங்கை மீனவர்கள் பிரச்சினை தலைதூக்க தொடங்கியது. இதற்கிடையே நடைபெற்ற இலங்கை உள்நாட்டு போர், இனப்பிரச்சினை உள்ளிட்டவற்றின்போது, தமிழக மீனவர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு, எல்லை பிரிப்பு, மீனவர்கள் கட்டுப்பாடு, கச்சத்தீவு பிரச்சினை போன்றவை ஆரம்பமாகின. அப்போது, தமிழக மீனவர்களுக்கு பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா உள்ளிட்ட 54 நாட்டிக்கல் கடல் மைல் எல்லை இருந்தது. அதன்பிறகு 12 நாட்டிக்கல் கடல் மைலாக எல்லை சுருங்கியது. இதனால், மீனவர்கள் எல்லைத் தாண்டும் பிரச்சினைகள், கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குநிரந்தர தீர்வு காணப்படும் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
» ஜோஜு ஜார்ஜின் ‘பனி’ படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு!
» ‘மதி அங்காடி’ மூலம் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.51 லட்சத்துக்கு விற்பனை: தமிழக அரசு
மாற்றாந்தாய் மனப்பான்மை: குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்யும்போது, இந்திய கடற்படை, வெளியுறவு துறை விரைந்து எடுக்கும் நடவடிக்கைகளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும்போது எடுப்பதில்லை. தமிழக மீனவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ளது. எனவே, மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எவ்வளவு மீனவர்கள் கைது: 2018-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடி சட்டத்திருத்தம் கொண்டு வந்த பிறகு கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதன்படி, 2018-ம் ஆண்டு 148 மீனவர்கள், 2019-ம் ஆண்டு 203 மீனவர்கள், 2020-ம் ஆண்டு 59 மீனவர்கள், 2021-ம் ஆண்டு 159 மீனவர்கள், 2022-ம் ஆண்டு 237 மீனவர்கள், 2023-ம் ஆண்டு 230 மீனவர்கள், 2024-ம் ஆண்டு இதுவரை 497 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று - நவ.21 - உலக மீனவர்கள் தினம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago