மயூராவுக்கு எதிராக மல்யுத்தம்! - கலகலக்கும் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ்

By டி.ஜி.ரகுபதி 


கதரையும் கைகலப்பையும் என்றைக்குமே பிரிக்கமுடியாது என்பதை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவை காங்கிரஸார் பொதுவெளியில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கோவை காங்கிரஸானது கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என மூன்று மாவட்​டங்களாக உள்ளது.

இதில், முக்கிய​மானது கோவை மாநகர் மாவட்டம். இதன் தலைவராக மயூரா எஸ்.ஜெயக்​குமார் இருந்​தார். ஆனால், மாநிலப் பொறுப்​பிலும் இருந்து கொண்டு மாவட்ட தலைவராகவும் இருக்​கலாமா என எதிர்க்​கோஷ்டி போர்க்கொடி தூக்கியது. இதனால் 2 ஆண்டு​களுக்கு முன்பு மாவட்ட தலைவர் பதவியை துறந்த மயூரா, தனது இடத்தில் தனக்கு அடக்கமான கருப்பு​சாமியை உட்கார​வைத்​தார். அத்துடன் மயூரா அகில இந்திய செயலா​ள​ராகவும் ஆனார்.

மாவட்ட தலைவர் பதவியைத் துறந்​தாலும் இன்றளவும் மாநகர் மாவட்ட காங்கிரஸின் லகான் மயூரா வசமே உள்ளதாகச் சொல்கிறார்கள். இதனால் இவருக்கும் ஐஎன்டி​யுசியைச் சேர்ந்த கோவை செல்வன் கோஷ்டிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். கோவை விமான நிலையத்தில் அதுதான் மோதலாக வெடித்​திருக்​கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநகர் காங்கிரஸ் நிர்வாகிகள், “கட்சியின் அகில இந்திய பொதுச்​செய​லாளர் வேணுகோபால் வயநாடு பிரச்​சா​ரத்தை முடித்து​விட்டு டெல்லி செல்வதற்காக கடந்த 17-ம் தேதி இரவு கோவை விமான நிலையத்​துக்கு வந்தார். அவரை வழியனுப்ப மயூரா ஜெயக்​குமார் தரப்பினரும், கோவை செல்வன் தரப்பினரும் விமான நிலையத்​துக்கு வந்தனர்.

அப்போது மயூராவின் செயல்​பாடுகள் குறித்து கே.சி.வேணுகோ​பாலிடம் எதிர் தரப்பினர் புகாரளித்​தனர். இதன் தொடர்ச்​சியாக விமான நிலைய வளாகத்​திலேயே மயூரா தரப்பினருக்​கும், கோவை செல்வன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆபாசமான வார்த்​தைகளால் திட்டிக் கொண்டனர்.

மூன்றரை ஆண்டுகள் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்த மயூரா கட்சி வளர்ச்​சிக்காக எதுவும் செய்ய​வில்லை. தொடர்ச்சியாக மூன்று சட்டமன்றத் தேர்தல்​களில் போட்டியிட தலைமை இவருக்கு வாய்ப்​பளித்தும் இவரால் ஜெயிக்க முடிய​வில்லை. இருந்த போதும் மேலிடத்தில் லாபி செய்து பதவிகளைப் பெற்று​விடும் இவர், இங்குள்ள யாரையும் மதிப்​ப​தில்லை.

கோவையில் மாநில நிர்வாகிகள் 10 பேர் இருக்​கிறார்கள். அதில் 9 பேர் இவருக்கு எதிராக இருக்​கிறார்கள். மாநகர் காங்கிரஸை இவரது பிடியி​லிருந்து மீட்க இவரை கட்சிப் பொறுப்​பிலிருந்து நீக்க வலியுறுத்தி தீர்மானமே நிறைவேற்றி இருக்​கிறார்கள்” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை செல்வன், “விமான நிலையத்தில் மயூரா ஜெயக்​குமார் எங்களிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்​தார். இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்து​விட்டு போலீஸிலும் புகார் அளித்​துள்ளோம்” என்றார். மயூரா ஜெயக்​கு​மாரோ, “என் மீதுள்ள காழ்ப்பு​ணர்ச்​சி​யாலும், தலைமைக்கு என் மீது உள்ள நம்பிக்கையை கெடுக்கும் வகையிலும் எதிர் தரப்பினர் வேண்டு​மென்றே தொடர்ந்து என்னை வம்புக்கு இழுக்​கின்​றனர்.

எனது பதவிக்​காலத்தில் கட்சியை வளர்க்க நான் அரும்​பாடு​பட்​டுள்​ளேன். கட்சி அறிவித்த அனைத்து போராட்​டங்​களையும் முன்னின்று நடத்தி​யுள்​ளேன். மாவட்ட தலைவராக நியமிக்​கப்​பட்​டுள்ள கருப்பு​சாமியும் கட்சியில் சீனியர் தான். அவரும் இந்தக் கட்சிக்காக பாடுபட்​டுள்​ளார். எதிர் தரப்பினரின் செயல்பாடு குறித்து கட்சி தலைமை​யிடம் நாங்களும் புகாரளித்​துள்ளோம்” என்றார். இவர்களை எல்லாம் வைத்துக்​கொண்டு தான் காங்கிரஸ் தலைவர்கள் காம​ராஜர் ஆட்சியை அமைப்போம் என்கிறார்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்