அரும்பாக்கம் விநாயகர் கோயில் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு நடவடிக்கை - மாநகராட்சி உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: அரும்​பாக்கம் ஜானகிராமன் காலனி​யில் குடி​யிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலை​யில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்​டுள்​ளது. இக்கோ​யில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்​குகள் நல ஆர்வலர், நாய்​களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்​கள், அசைவ உணவை உண்டு​விட்டு, எலும்​புகளை விநாயகர் கோயி​லில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.

எனவே, நாய்களுக்கு இப்பகு​தி​யில் உணவளிப்பதை தவிர்க்​கு​மாறு பக்தர்கள் சார்​பில் விலங்​குகள் நல ஆர்வலரிடம் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விநாயகர் கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்​பட்​ட​தாக​வும், அதை அகற்ற கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விலங்​குகள் நல ஆர்வலரின் உறவினர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்​கில் மாநக​ராட்சி நிர்​வாகம், பக்தர்​களுடன் கலந்​து பேசி தீர்வு காணு​மாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்நிலை​யில், ஆக்கிரமிப்​பில் உள்ள கோயிலை மாநக​ராட்சி இன்னும் அகற்​ற​வில்லை என நீதி​மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதில் வட்டாட்​சியர் நேரில் ஆய்வு செய்து, மாநக​ராட்சி சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்​பட்​டதாக அறிக்கை அளித்துள்ளார்.

அதன் அடிப்​படையில் கோயிலை, பக்தர்களே அகற்ற வேண்​டும். இல்லா​விட்​டால் மாநக​ராட்சி அகற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்றம் தீர்ப்​பளித்​திருந்​தது. அதன்​படி, கோயிலை அகற்ற பக்தர்​களுக்கு கொடுத்த அவகாசம் முடிந்த நிலை​யில், காவல்​துறை பாது​காப்புடன் சென்று, மாநக​ராட்சி அதிகாரிகள் நேற்று முன்​தினம் கோயிலை அகற்ற முயன்​றனர். அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதற்​கிடை​யில் பக்தர்கள் சார்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு, கோயிலை அகற்ற இடைக்கால தடை பெறப்​பட்டது.

இதுதொடர்பாக பக்தர்கள் கூறிய​தாவது: இந்த கோயில் தொடர்பாக சென்னை மாநகர சிவில் நீதி​மன்​றத்​தில் நிலுவை​யில் உள்ள வழக்கு குறித்து, அவமதிப்பு வழக்​கில் தெரிவிக்க​வில்லை. இந்த கோயில் ஆக்கிரமிப்பாக இருந்​தா​லும், மக்களின் மதநம்பிக்கை சார்ந்​தது. 40 ஆண்டு​ களாக மக்கள் வழிபட்டு வருகின்​றனர்.

அதனால் கோயிலை அகற்​றாமல் இருக்க, அரசு சார்​பில் சரியான வாதங்களை வைத்து, எங்கள் மத நம்பிக்கை​யைப் பாது​காக்க வேண்​டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக மாநக​ராட்சி அதிகாரி​களிடம் கேட்​ட​போது, “தற்​போது இந்த கோ​யில் தொடர்பாக 2 வழக்​கு​கள் நீ​தி​மன்​றத்​தில் நிலுவை​யில் உள்ளன. அவற்றின் தீர்ப்பு அடிப்​படை​யில் நட​வடிக்கை எடுக்​கப்​படும்​” என்றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்