சென்னை: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக். 29-ம் தேதி பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மூளை மற்றும் நரம்பியல் துறை சார்பில், பக்கவாத நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தலைமையில் நடந்த பேரணியில் நரம்பியல் சிகிச்சை பிரிவு துறை தலைவர் ஆர்.எம்.பூபதி உட்பட மருத்துவர்கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர். பின்னர், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் நரம்பியல் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் ஆர்.எம்.பூபதி பேசியதாவது: மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுதல், ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தப்போக்கு உருவாகுதல், இதயம் சரியாக வேலை செய்யாமை மற்றும் மூளையிலிருந்து கெட்ட ரத்தம் அடைபட்டு போதல் உள்ளிட்ட காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது.
இதில், ரத்தக் குழாய் அடைப்பால்தான் பெரும்பாலானோருக்கு பக்கவாதம் வருகிறது. உடலின் ஒரு பக்கத்தில் திடீரென உணர்வின்மை அல்லது பலவீனம், திடீர் குழப்பம், பேசுவதில் சிரமம், பேச்சை புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் மூலமாக பக்கவாத பாதிப்பை கண்டறிய முடியும்.
பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட முதல் 6 மணி நேரம் முக்கியமானது. அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரத்த உறைவை கரைக்கும், ‘க்ளாட் பஸ்டர்’ மாத்திரை போன்ற, ‘த்ரோம்போலிசிஸ்’ சிகிச்சை முறை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையை உடனடியாக எடுக்காவிட்டால், மூளை திசுக்கள் அழிந்து, நிரந்தர பக்கவாதமாக மாறிவிடும். 100 நோயாளிகளில் 40 பேர் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில், 5 சதவீதத்துக்கு குறைவானவர்களே, ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.
பக்கவாதம் வருவதற்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கம் சரியான முறையில் இல்லாதது, உரிய நேரத்தில் சாப்பிடாதது, கண்ட நேரங்களில் துரித உணவு உள்ளிட்டவற்றை சாப்பிடுதல் உள்ளிடவையே காரணம். நரம்பியல் சார்ந்த பாதிப்பு இளம் வயதினரிடையே அதிகரித்துள்ளது. மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, இரவில் தூக்கம், சரியான நேரத்தில் சாப்பிடுவது ஆகியவற்றை கடைபிடித்தால் பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி கூறுகையில், “நம்முடைய அன்றாட உணவில் அதிக அளவு எண்ணெய், உப்பு சேர்த்தலும் பக்கவாதத்துக்கு காரணமாக இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்யாமல் எங்கு சென்றாலும் வாகனத்தில் செல்கிறோம். சரியான நேரத்துக்கு தூங்குவதில்லை.
இதன் மூலம் மன உளைச்சல், மன அழுத்தம் உருவாகிறது. எனவே, இந்த 3 வகை பிரச்சினைகள் இல்லாமல் வாழ்க்கையை கொண்டுசெல்ல வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், பக்கவாத பாதிப்புக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago