சென்னை: பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட டைடல் பார்க்கை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதன் மூலம், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இப்பகுதி வளர்ச்சி அடையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சிறிய நகரங்களில் டிட்கோ மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள டைடல் பார்க் நிறுவனம் சார்பில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான (ஐ.டி.) உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் 21 மாடிகளைக் கொண்ட டைடல் பார்க் கட்டிடம் கட்ட கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.279 கோடி செலவில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதி, உணவகம் (ஃபுட் கோர்ட்), 24 மணி நேர கண்காணிப்பு பாதுகாப்பு வசதி, அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், தியானம் செய்வதற்கான அறை, மின்சார வாகனங்கள் சார்ஜிங் செய்வதற்கான வசதி, மருத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
» ராமேசுவரத்தில் ஒரேநாளில் 41 செ.மீ. மழை: 25, 26-ல் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
கட்டிடத்தின் மாடியில் தோட்டம் மற்றும் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய பசுமைக் கட்டிட கவுன்சில் (ஐஜிபிசி) பிளாட்டினம் தர மதிப்பீடு செய்யப்பட்ட பசுமை கட்டிட கருத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் 13 மற்றும் 16-வது மாடிகளுக்கு இடையே தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு மாடிகளில் அலுவலகம் அமைக்கும் நிறுவனங்களுக்கு பிரீமியம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுகுறித்து, டிட்கோ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த டைடல் பார்க் மூலம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த டைடல் பார்க்கை தமிழக முதல்வர் வரும் 22-ம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார். இதுவரை 2 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன’’ என்றனர்.
இதுகுறித்து, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சடகோபன் கூறுகையில், ``பட்டாபிராமில் டைடல் பார்க் அமைக்க வேண்டும் என்ற எங்களது 14 ஆண்டுக்கால கனவு நிறைவேறியுள்ளது. 40 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த இடத்தில் 11 ஏக்கர் பரப்பளவில்தான் டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. எஞ்சிய காலி இடத்திலும் டைடல் பார்க் கட்ட வேண்டும். இதன் மூலம், பட்டாபிராமை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடைவதோடு, அரசுக்கும் வருவாய் கிடைக்கும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago