சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் முகநூலில் பேசியது: கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. ஒருங்கிணைப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட அனைவரும் கட்டாயம் களத்தில் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு சார்பு அணுகுமுறையை கடைபிடிக்கக்கூடாது.
மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, மாநில பொறுப்புகள், துணை நிலை அமைப்புகளின் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற வேண்டும். பட்டியலினத்தவர் அல்லாதவர், பெண்கள், சிறுபான்மையினர், மாணவர்கள், இளைஞர்கள் தரப்பினர் விண்ணப்பிக்காமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கு தக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும். பட்டியலினத்தவர் அல்லாதவர், சிறுபான்மையினர், பெண்களை கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் கொண்டுவர ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago