மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூரில் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு பயிற்சி தமிழாசிரியர் ரமணி (26) பள்ளி வளாகத்தில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டார். சமீபகாலமாக தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களில் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த மனிதாபிமானமற்ற செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆசிரியையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எந்த அரசு துறை வளாகங்களுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் முறையான காவலர் நியமனம் செய்யப்படுவது கிடையாது. செலவுகளை குறைக்கிறேன் என்ற பெயரில் தேவையற்ற திட்டங்களை குறைப்பதற்கு பதிலாக அரசு அலுவலகங்களில், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை, அத்தியாவசியத் தேவைகளை குறைக்கும் வேலையைத்தான் தமிழக அரசு, நிர்வாகம் மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்துவருகிறது. அதன் நீட்சியே இதுபோன்ற சம்பவங்கள். முறையான பாதுகாப்பு வசதி பள்ளி வளாகத்தில் இருந்திருந்தால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதியை உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை பெற்றுத்தரவும், பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
» மீண்டும் தொடங்குகிறது இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
» நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
நடந்தது என்ன? - தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30). இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, மதன் குடும்பத்தினர், ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், மதனைப் பிடிக்கவில்லை என ரமணி கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை ரமணி பணியாற்றி வந்த பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறைக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனையறிந்த மாணவர்கள் அலறி அடித்து வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வருவதையறிந்த மற்ற ஆசிரியர்கள், அந்த வகுப்பறைக்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரமணி கிடந்தார்.
இதையடுத்து, அவர்கள், ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய மதனை போலீஸார் தேடி வருகின்றனர்.
அன்பில் மகேஸ் ரியாக்ஷன்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்,” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago